Skip to main content

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் காலமானார்!

Published on 30/05/2021 | Edited on 30/05/2021

 

 

marxist communist party leader passed away in chennai


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் இன்று (30/05/2021) காலமானார். அவருக்கு வயது 81. 

 

இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் இருந்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணை தலைவராக இருந்துள்ளார்.  தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி உண்மைகளை ஆவணப்படுத்தியவர் மைதிலி சிவராமன். 1966- 1968 ஆம் ஆண்டு வரை ஐ.நா.மன்றத்தின்  உதவி ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்துள்ளார். கீழ்வெண்மணி படுகொலை சம்பவம் குறித்து மைதிலி சிவராமன் எழுதிய தொடர் கட்டுரை ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியானது.

 

மைதிலி சிவராமன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவருமான மைதிலி சிவராமனின் திடீர் மறைவுச் செய்தி பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அளிக்கிறது. அவருடைய மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

பெண்ணுரிமை போராளியான அவர், முதலில் நியூயார்க் பட்ஜெட் டிவிஷனிலும், பிறகு ஐ.நா. மன்றத்தில் உதவி ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருந்து மைதிலி சிவராமன், ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவராக இருந்து பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் அயராது குரல் கொடுத்த ஒரு புரட்சிப் பெண்ணாகத் திகழ்ந்தவர்.

 

கீழ்வெண்மணி துயரத்தை அந்த கிராமத்திற்கே நேரில் சென்று விசாரித்து, நீண்ட தொடர் கட்டுரை எழுதியவர். அவை 'Hunted by Fire' என்ற புத்தகமாக வெளிவந்து, இன்றும் வரலாற்று ஆவணமாக இருக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்தக் கொடுமைகளைத் தட்டிக் கேட்கப் போராடி, அம்மக்களுக்கு நீதி கிடைத்திட இரவு பகலாக உழைத்தவர். பெண்களுக்கு எதிராக எங்கு அநீதி நடைபெற்றாலும், அங்கே வெகுண்டெழும் ஆவேசக் குரலாக மைதிலி சிவராமனின் குரல்தான் இருக்கும்.

 

போர்க்குணமும், துணிச்சலும் நிரம்பிய ஒரு பெண்ணுரிமைப் போராளியை தமிழகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பறிகொடுத்திருப்பது பேரிழப்பாகும்.

 

மைதிலி சிவராமனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், அவரோடு இணைந்து பணியாற்றிய மகளிருக்கும் எனது ஆழந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் இருக்கும்'- பிரகாஷ் காரத் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Marxist Communist will support Tamil Govt's ongoing case'- Leadership Committee Member Prakash Karath Speech

தி.மு.க கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில்  ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி மற்றும் நகர செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினார். திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி, அவை தலைவர் மோகன், முன்னாள் நகர்மன்ற தலைவர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கே. பாலு உள்பட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் பிரகாஷ் கரத் பேசுகையில், 'மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்திய நாடு என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் மொழி இருக்கிறது. கலாச்சாரம் இருக்கு பண்பாடு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமூக கட்டுப்பாடு இருக்கிறது. இவை அனைத்தும் இணைந்தது தான் இந்தியா என்கிற ஒரு மகத்தான நாடாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி இந்தக் கட்டமைப்பையும் இந்த ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து இந்தியாவை ஒற்றை நாடாக ஒரு எதேச்சை அதிகாரம் நாடாக மாற்ற விரும்புகிறேன். நம்முடைய கலாச்சார பன்முகத்தன்மையை அழிந்து ஒரே கலாச்சாரம் ஒரே மொழி ஒரே தலைவர் என்ற சூழ்நிலையை உருவாக்க பாஜக முயன்று வருகிறது.

மத்திய அரசு ஆளுநரை வைத்து அனைத்து துறைகளிலும் தலையீடு செய்கின்றன ஒரு மோசமான சூழ்நிலை உள்ளது. மாநில அரசுகளுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தராமல் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் மாநில அரசுகளால் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் நிலைமை கேரளாவிலும் உள்ளது. மத்திய அரசின் செயலை கண்டித்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் உரிய நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் மத்திய அரசு மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு ஆதரவாக உறுதுணையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். மாநிலங்களுக்கு நிதியை வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்தை மறுப்பது ஆளுநர்களைக் கொண்டு ஆட்சியில் தலையிடுவது போன்றவற்றை தடுத்து நிறுத்தக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மோடி அரசாங்கம் ஊழலின் மொத்த உருவமாக உள்ளது என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. மெகா ஊழலாக தேர்தல் பத்திரம் மோசடி ஊழல் நடைபெற்று உள்ளது. தேர்தல் பத்திரம் மூல மாக கார்ப்பரேட் நிறுவனங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு 50 சதவீதத்திற்கும் மேலாக வழங்கி உள்ளன. தேர்தல் பத்திரம் மூலமாக 8,752 கோடி வாரி சுருட்டி உள்ளது பாரதிய ஜனதா கட்சி. இந்த மெகா ஊழலை மத்திய அரசு எப்படி செய்து உள்ளது என்றால் அமலாக்குத்துறை, மத்திய விசாரணை முகமைகளை கொண்டு சோதனை நடத்துவது அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டுவது, லஞ்சம் வாங்க வாங்குவது பத்திரமாக வாங்குவது போன்ற வழிகள் மூலமாக நிதியை பெற்றுள்ளது'
என்று கூறினார்.