Skip to main content

பாட்டு பாடிக்கொண்டே படகோட்டிய நடிகர் மன்சூர் அலிகான்!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

Mansoor Ali Khan, the actor who shot the song while singing!

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், திருச்சி, நாமக்கல், சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. 

 

குறிப்பாக, சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வேலைக்குச் செல்வோர், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மழைநீரை அகற்றிய பின் மின்விநியோகம் செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

 

இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் வசிக்கும் தெருவில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அவர் படகுடன் சாலையில் இறங்கிப் படகை ஓட்டிக்கொண்டே, "பொறந்தா தமிழ்நாட்டில பொறக்கணும், நல்லா சென்னையில தண்ணியில மெதக்கணும். பொறந்தா தமிழனாகப் பொறக்கணும், சென்னையில கார் ஓட்டி மகிழணும்..’ என்று பாட்டு பாடிக்கொண்டு, ‘இதுதான் வைகை ஆறு, இதுதான் காவிரி ஆறு, இதுதான் தாமிரபரணி, பாலாறு, தேனாறு, கொள்ளிடம் ஆறு, அனைத்து நதிகளும் வான் மழையென கொட்டுகிறார். பொறந்தா தமிழனாகப் பொறக்கணும்" என்று மீண்டும் கூறி சிரித்தார். 

 

இது தொடர்பான நடிகர் மன்சூர் அலிகானின் வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.