சென்னை தி.நகர் மூசா தெருவில் உள்ள ராஜேந்திர பாபு என்பவருக்கு சொந்தமான உத்தம் ஜூவல்லரியின் மொத்த விற்பனை கடையில் கடந்த 22ஆம் தேதி அன்று இரவு 20 கிலோ தங்கம் மற்றும் வெள்ளியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து உரிமையளர் கொடுத்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு நகை கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர். இந்த நிலையில், சைபர் கிரைம் போலீசர் அந்த நபரின் செல்ஃபோன் அவ்வப்போது திருவள்ளூர் பகுதியில் வேலை செய்துள்ளது என கொடுத்த தகவலுன் அடிப்படையில், தனிப்படை காவல்துறையினர் திருவள்ளூர் விரைந்தனர். அங்கு கார்த்திக் எனும் நபர்தான் கொள்ளையனுடன் அவ்வப்போது பேசி வந்ததாக தெரிந்தது. ஆனால் கார்த்திக் அங்கு இல்லாததால் அவரின் காதலியிடம் விசாரணையை தீவிரப்படுத்தியது காவல்துறை. அதன்மூலம் கோடம்பாக்கம் காமராஜ் நகரை சேர்ந்த மார்க்கெட் சுரேஷ் உடன் வெளியே சென்று வருவதாக கடந்த 21ஆம் தேதி இரவு சென்றவர் இன்றுவரையிலும் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் சுரேஷ் யார் என்று பார்த்தபோது பிரபல கொள்ளையன் என்று தெரியவந்தது. இன்நிலையில் நகை கொள்ளை போன சிசிடிவி பதிவுகளில் சுரேஷ் புகைப்படத்தையும் வைத்து பார்த்ததில் நகை கொள்ளயடித்து இவர்கள்தான் என்று தெரியவந்துள்ளது.
இருவருமே திருட்டு வழக்கில் சிறை சென்றபோது பழக்கமானதும் வெளியே வந்த இருவரும் சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் உறுதியானது. இதனை தொடர்ந்து அடுத்த நகர்வை எடுத்துவைத்த தனிப்படை, கார்த்திக்கை செல்ஃபோன் சிக்னல் உதவியுடன் முக்கிய குற்றவாளியான சுரேஷ் திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரயில் நிலையம் அருகே கைது செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து நகை எங்கே என்ற விசாரணையில் மறைத்து வைத்திருந்த ஏழு கிலோ வெள்ளி கட்டிகள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள தங்கம் மற்றும் தங்கம் கலந்த வைர நகைகள் குறித்து தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.