திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வாழ்க்கையில் அனைவரும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ‘ஹானஸ்ட் ஷாப்’ எனும் ஆளில்லா கடை திறக்கப்பட்டது. இந்தக் கடையை பள்ளி தலைமை ஆசிரியர் விமலா திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “வாழ்க்கையில் அனைவரும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, ஆளில்லா கடை ‘ஹானஸ்ட் ஷாப்’ திறக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கு தேவையான எழுதுபொருட்கள், பென்சில், தாள்கள், புத்தகங்கள் உட்பட பல்வேறு கல்வி உபகரணங்கள் அசல் விலையுடன் அலமாரியில் அடுக்கப்பட்டு அருகிலேயே உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை மாணவர்களே எடுத்துக் கொண்டு அதற்கான விலையினை உண்டியலில் செலுத்திவிடும் வகையில் ஆளில்லா கடை ஹானஸ்ட் ஷாப் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.