கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கூட்டுசாலை பகுதியில் வசித்து வரும் ஆனந்தன் மகன் ஜெகதீஸ். இவர் நேற்று மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் இன்று வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்பு உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு இது குறித்து சங்கராபுரம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம் பகுதியில் தொடர்ந்து கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.