Published on 23/06/2021 | Edited on 23/06/2021

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தேர்தல் நடத்தக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (23/06/2021) விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், "கரோனா இரண்டாவது அலை பரவியதற்கு, தேர்தல் காரணமாக அமைந்துவிட்டது. மீண்டும் தேர்தல் பரப்புரையில் கட்சியினர், மக்கள் ஈடுபட்டால் தொற்று பரவ வாய்ப்பாகிவிடும். இது பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் அதன் தீர்ப்பு வந்த பின் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும்" எனக் கூறி வழக்கு தொடர்பான விசாரணையை ஒத்திவைத்தனர்.