சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி தமிழகம் திரும்பியுள்ள சசிகலாவின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என வியூகங்கள் வெளியாகி வரும் நிலையில், சசிகலா கைப்பற்ற நினைக்கும் அதிமுகவுடன் தற்போது தேர்தல் கூட்டணியில் உள்ளது பாஜக.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகனிடம் சசிகலா வருகை மற்றும் அவருக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த எல்.முருகன், ''சசிகலா நேற்றைக்குத்தான் தமிழகம் வந்திருக்கிறார்கள். அவரது நிலைப்பாடு என்ன என்பதை அவர் சொன்ன பிறகு இதைப் பற்றி நான் கருத்து சொன்னால் நன்றாக இருக்கும். அரசியல் கட்சிகளில் எல்லோருக்கும் வரவேற்பு கொடுப்பது இயல்புதான். அதில் புதியதாக ஒன்றும் இருப்பதைப்போல் தெரியவில்லை. இருப்பினும் அவருடைய தேர்தல் நிலைப்பாடு என்னவென்று அறிவித்தபின் நான் கருத்து சொல்கிறேன்'' என்றார்.