/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rest3332.jpg)
சாப்பிடும் இடத்தை சண்டைக் களமாக்கிய சிரிப்பு சம்பவம் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் நடந்தது அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
இந்த நகரிலுள்ள பூங்கா ஒன்றில் ஒரு உணவகம் உள்ளது. நேற்றிரவு (22/09/2021) வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த அருண் குமார், பால்ராஜ், நாகராஜ், அஜித்குமார் உள்ளிட்டோரும், அடுத்து கிருஷ்ணாநகரைச் சேர்ந்த பிரசாத், முருகன், சிவராமன் ஆகியோரும் எதிரும் புதிருமாக அமர்ந்து உணவருந்தியுள்ளனர். அதுசமயம் அருண்குமார் வழக்கம் போல் தனக்குத் தெரிந்த அந்த ஹோட்டலின் சப்ளையரிடம் இயல்பாகவே சிரித்துப் பேசியிருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rest3322.jpg)
இவரின் சிரிப்பு எதிர் தரப்பில் சாப்பிட்டுக் கொண்டிருந்தப் பிரசாத்தை நோக்கியிருந்ததாகத் தெரிகிறது. இதனால் சூடான பிரசாத், அருண் குமாரைப் பார்த்து எங்களைப் பார்த்து ஏன் சிரித்தாய் என அருகில் சென்று கேட்க இரண்டு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, கைகலப்பு ஏற்பட்டதில் அருகிலிருந்த சேர், குழம்பு வாளி, தண்ணீர் சொம்பு ஆகியவைகளால் இரு தரப்புகளும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இரண்டு தரப்பு மோதலால் ஓட்டல் பரபரப்பாக அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அச்சத்தில் வெளியே ஓடியிருக்கிறார்கள்.
இவர்களின் மோதலால் அந்த உணவகம் சேதமானதுடன் போர்க்களம் போன்று காட்சியளித்தது. இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்ய, வழக்குப் பதிவு செய்த போலீசார் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வெளியாகியிருக்கும். இது குறித்த சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)