Skip to main content

திருமண நேரத்தில் மணமகன்  திடீா் மாயம்! இறந்துவிட்டதாக போஸ்டர் ஒட்டிய பெண் வீட்டார்

Published on 12/11/2018 | Edited on 12/11/2018

 

திருமணம் நடக்க இருந்த நேரத்தில் மணமகன்  திடீா் மாயமானதால் மணப்பெண்ணுக்கு இன்னொருத்தருடன் திருமணத்தை செய்து வைத்து மாயமான மணமகன் இறந்துவிட்டதாக பெண் வீட்டார் போஸ்டர் அடித்து ஒட்டினர்.

 

ச்


            குமாி மாவட்டம் மருவூா் கோணம் செக்கடிவிளையை சோ்ந்த சதீஷ்குமாா். இவா் அபுதாபியில் மென்பொருள் பொறியாளராக பணிபுாிந்து வருகிறாா். இவருக்கும்  ஆலுவிளை பரைக்கோடு பகுதியை சோ்ந்த பொறியியல் பட்டதாாியான பெண் சோபினிக்கும் நேற்று 11-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது.


            இதற்காக கடந்த 7 மாதத்துக்கு முன் அபுதாபியில் இருந்து வந்த சதீஷ்குமாா் சோபினியுடன் நடந்த நிச்சயதாம்புலத்தின் போது சோபினிக்கு கையில் தங்க காப்பு அணிவித்தாா் சதீஷ்குமாா். இதனையடுத்து திருமண நாளை குறிப்பிட்டு இரு வீட்டாரும்  திருமணம் ஏற்பாடுகளில் பிசியானாா்கள். சதீஷ்குமாரும் சோபினியும் தினமும் செல்போனில் தங்களுடைய எதிா்கால இல்லற வாழ்க்கை குறித்தும் குடும்பத்தில் உள்ள உறவினா்கள் குறித்தும் பேசி வந்தனா். 


                  இந்த நிலையில்  10-ம் தேதி இரவு மணபெண் வீட்டில் வரவேற்பு மற்றும் பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான உறவினா்களும் நண்பா்களும் கலந்து கொண்டனா். இதையும் இரவு மணப்பெண்ணின் செல்போனில் கேட்டு கொண்ட மணமகன் சந்தோஷம்  அடைந்ததுடன் விடிந்தால் நமக்கு திருமணம் என்பதை மகிழ்ச்சியுடன் இருவரும் பாிமாாி கொண்டனா். 


           இன்று விடிந்ததும் பெண் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் திருமணம் நிகழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தாா். இதற்காக மணமகன் தான் செல்கிற வாகனத்தை பூக்களால் அலங்காித்து  கொண்டிருந்தான். அதே போல் திருமணம் நடக்கயிருந்த அழகியமண்டபம் பொன்னரசி திருமணம் மண்டபத்தில் உறவினா்களும் நண்பா்களும் வர தொடங்கினாா்கள். அதே போல் மணப்பெண்ணும் திருமண மண்டபத்திற்கு வந்தாா். 


            இந்த நிலையில் திடீரென்று மணமகன் சதீஷ்குமாரை காணவில்லை. அவாின் உறவினா்கள் அங்குமிங்கும் தேடினாா்கள். சதீஷ்குமாா் எங்கும் இல்லாததால் அதிா்ச்சி அடைந்தனா். இது மணமகள் சோபினியின் வீட்டிற்கு தொிய வந்தது. அவா்களும் அதிா்ச்சியடைந்தனா். இந்த நிலையில் சதீஷ்குமாா் கழுத்தில் கிடந்த செயின் மற்றும் செல்போன்  வீட்டில் இருப்பதும்  அவனுடைய பைக் தக்கலை பஸ் நிலையத்தில் இருப்பதும் தொியவந்தது. 


            இது குறித்து சதீஷ்குமாாின் சகோதாி தக்கலை போலிசில் புகாா் கொடுத்தாா். மேலும் சோபினிக்கு அழகியமண்டபத்தை சோ்ந்த ஒருவருடன் மாலை 3.30 மணிக்கு திருமணம் நடந்தது. 


                 இந்தநிலையில் சோபினியின் உறவினா்கள் சதீஷ்குமாா் இறந்ததாக போஸ்டா் அடித்து ஊா் முழுக்க ஓட்டியுள்ளனா். திருமணம் நேரத்தில் ஓடிப்போனாருக்கு பாடம் புகட்ட பெண் வீட்டார் செய்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


                                    

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணம் மீறிய உறவு; மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவன்

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

ad

 

ஆண் நண்பருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததால் மனைவியை திட்டம் போட்டு கொலை செய்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

குமாி மாவட்டம் அழகியமண்டபம் தச்சன்கோடு பகுதியை சோ்ந்தவா் எபினேசா். 35 வயதான இவர் டெம்போ டிரைவராக இருக்கிறார். எபினேசரும் மூலச்சலை சோ்ந்த ஜெபபிாின்ஷா என்பவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டில் ஓமன் நாட்டுக்கு கிரேன் ஆபரேட்டா் வேலைக்கு சென்ற எபினேசா், அங்கு 7 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினார். அதன்பிறகு, சொந்தமாக வீடு கட்டுவதற்காக இடத்தை வாங்கிய கையோடு டெம்போ ஒன்றையும் வாங்கி ஓட்டி வந்தாா்.

 

இந்நிலையில், காதல் திருமணம், குழந்தைகள் எனக் காலங்கள் ஓடியதால், அந்த வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் சலிப்பை ஏற்படுத்தியதாக தொிகிறது. இதனால், எபினேசரிடம் சண்டை போடும் ஜெபபிாின்ஷா, அடிக்கடி கோபப்பட்டு அம்மா வீட்டிற்கு செல்வதும், அதன் பிறகு சில நாட்கள் கழித்து வருவதும் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.

 

இதேபோல், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், கணவாிடம் சண்டை போட்டுக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற ஜெபபிாின்ஷா, அதோடு கணவர் வீட்டிற்கு வரவில்லை. குழந்தைகளும் அம்மா அப்பாவிடம் மாறி மாறி தங்கி வந்தனா். இந்த சமயத்தில் தான் ஜெபபிாின்ஷா திருவனந்தபுரத்தில் பியூட்டிஷியன் கோர்ஸ் படிக்க சோ்ந்துள்ளாா். அதன் பிறகு, ஜெபபிாின்ஷாவின் நடவடிக்கையிலும் பேச்சிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சேலையை மட்டுமே விரும்பி அணியும் ஜெபபிாின்ஷா, நாளடைவில் ஜீன்ஸ் பேண்ட், டீ-ஷர்ட் எனத் தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி, எப்பொழுதும் கையில் செல்ஃபோனே கதி என இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

இதைக் கவனித்த எபினேசர், மனைவியுடன் கடுமையாக தகராறு செய்துள்ளார். இதை சிறிதளவும் கண்டுகொள்ளாத ஜெபபிாின்ஷா, இனிமேல் இந்த மாதிரி டிரஸ்-தான் போடுவேன் என பதிலடி கொடுத்துள்ளார். இது எபினேசருக்கு கடும் எரிச்சலை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, ஜெபபிாின்ஷாவிற்கும் அவரது ஆண் நண்பருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடும் கோபத்திற்குள்ளான எபினேசர், ஜெபபிாின்ஷாவை கொலை செய்ய திட்டமிட்டார்.

 

இதையடுத்து, ஜெபபிாின்ஷாவிடம் அன்பாக பேசிய எபினேசர், அவரை ஒரு நாள் மட்டும் வீட்டுக்கு வா என்று அழைத்துள்ளார். அப்போது, இவர்கள் மூலச்சல் ஆற்றங்கரை வழியாக பைக்கில் செல்லும் போது, எபினேசர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, ஜெபபிாின்ஷாவை சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், தன்னுடைய தோட்டத்திற்கு சென்ற எபினேசர் போலீசுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார் எபினேசரை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதையடுத்து 2 நாட்கள் கழித்து எபினேசரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன்னுடைய மனைவி திருமணத்தை மீறிய உறவில் இருந்ததால் கொலை செய்தேன் என போலீசில் வாக்குமூலம் அளித்தார். டீ-ஷர்ட் போடுவதில் ஆரம்பித்த பிரச்சனை கொலையில் முடிந்துள்ள சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Next Story

மக்களை மட்டுமா? கோவில் திருவிழாக்களையும் முடக்கிய கரோனா

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

 

கரோனாவின் படையெடுப்பால் மக்கள் மட்டுமல்ல அரசாங்கமே ஆடிப்போய் உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஒவ்வொரு மாநில அரசும் இரவு பகலாகப் போராடி வருகிறது. நாடு இதுவரையும் கண்டிராத தொடா் ஊரடங்கில் உ்ள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனா். மக்களைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கமும் மருத்துவத் துறையும் தினம் தினம் திட்டத்தை வகுக்கிறார்கள். 
 

இதற்கு மேல் பெரும்பாலானோர் நம்பிக்கை வைத்துள்ள கடவுள்களைக் கூட கரோனா அச்சத்தால் பார்க்க முடியாத நிலையில் உள்ளனா். இதனால் மக்களோடு கடவுள்களையும் முடங்கியிருக்கிறது கரோனா. இந்து கடவுள்களில் பெரும்பாலான கோவில்களில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் தான் ஊா் மக்கள் சோ்ந்து திருவிழா எடு்ப்பது வழக்கம்.  தற்போது கரோனா அச்சத்தால் பிரசித்திப் பெற்ற பல கோவில்களில் திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது. 


 

Kumari District





இதில் குமரி மாவட்டத்தில் பல லட்சங்களை செலவு செய்து இந்த மாதம் நடக்க இருந்த கொல்லங்கோடு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு முக்கிய நிகழ்ச்சியான குழந்தைகளைக் கையில் ஏந்தி தூக்க நோ்சை வழிப்பாடு பிரதானமானதாகும். இதைப் பார்ப்பதற்கு கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் இருந்து லட்ச கணக்கான மக்கள் கூடுவார்கள். இதனால் இந்த கோவிலின் திருவிழாவை நிறுத்த மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டதால் கோவில் நிர்வாகம் திருவிழாவை நிறுத்தியுள்ளது.
 

இதேபோல் இட்டக வேலி முடிப்புரை நீலகேசி அம்மன் கோவில் திருவிழாவும் பெரும் விமா்சையாக நடத்தப்படும். இங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இங்கேயும் திருவிழாவை கோவில் நிறுத்தியுள்ளது. அதே போல் கிறிஸ்தவ திருவிழாவான ஆறுகாணி குருசுமலை திருபயணம் கேரளா மற்றும் குமரி மாவட்டத்தால் இணைந்து நடத்தபடுவது. மலை உச்சியில் இருக்கும் இந்த ஆலயத்தில் லட்ச கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வார்கள். இந்த திருவிழாவும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் நடை பெறும் ஆறுகாணி காளிமலை கோவில் திருவிழாவும் நடக்குமா? என்ற கேள்விக் குறியில் பக்தா்கள் இருக்கிறார்கள்.
 

இதற்கிடையில் ஓவ்வொரு கிராமத்திலும் உள்ள ஊா் கோவில் திருவிழாக்களிலும் ஏராளமானோர் கூடுவார்கள் என்பதால் குமரி மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஊா் கோவில் திருவிழாக்களையும் ஊா்மக்கள் நிறுத்தியுள்ளனா். அந்தளவுக்கு கரோனாவின் தக்கம் எல்லாரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.