Skip to main content

திருவாரூரில் கிருஷ்ணா ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
nee

 

திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரியல் எஸ்டேட் அதிபரை காரில்வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். நகர காவல்துறையினர் சிசிடிவிபதிவுகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் கடத்தல் சம்பவ நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

 

திருவாரூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் நீதிமோகன்.இவர் திருவாரூர் புதுத் தெருவிலிருந்து வடக்குவீதியில் உள்ள தனது கிருஷ்ணா ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு தனது அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றும் ராஜேந்திரனுடன் இருசக்கர வாகனத்தில் பின்பக்கத்தில் அமர்ந்து சென்ற போது பிடாரி கோயில் தெருவில் காரில் வந்த மர்ம நபர்கள் நீதிமோகனை கடத்தி சென்றுள்ளனர்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த உதவியாளர் ராஜேந்திரன் திருவாரூர் நகர காவல்துறைக்கு உடனடியாக புகார் தொிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் மாவட்ட முழுவதும் சோதனை சாவடிகளுக்கு தகவல் தொிவித்தும், கண்காணிப்பு கேமாரக்களை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட நீதி மோகன் மாத தவணையில் நிலம் வழங்குவதாக கூறி மோசடி செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளது.

 

கடந்த 15 தினங்களுக்கு முன்பு தான் நீதிமோகனுக்கு வழங்கப்பட்டிருந்த காவலர் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டிருந்த குறிப்பிடதக்கது. எனவே பாதிக்கபட்டவர்களால் கடத்தப்பட்டார, அல்லது முன்விரோத காரணமாக கடத்தப்பட்டாரா அல்லது கடத்தல் நாடகமா என்பது போன்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்டு பலமணி நேரம் ஆனப் பிறகும் எந்த தகவலும் கடத்தல் காரர்களிடமிருந்து வரவில்லை என்பாதால் நீதிமோகன் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்