Skip to main content

கொங்கு முன்னேற்றக் கழகத்துக்கு தொப்பி சின்னம்!

Published on 07/12/2017 | Edited on 07/12/2017
கொங்கு முன்னேற்றக் கழகத்துக்கு தொப்பி சின்னம்!

நமது கொங்கு முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைச் சேர்ந்த ரமேஷ் என்ற வேட்பாளருக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தை ஒதுக்கியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனக்கு தொப்பி சின்னம் வேண்டும் என டிடிவி தினகரன் கோரியிருந்தார். இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்கக் கூடாதென அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு தொடர்பான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், தேர்தல் ஆணைய விதிகளின் படி பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்குத்தான் சின்னம் ஒதுக்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதால், டிடிவி தினகரனுக்கு தொப்பிச்சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

நமது கொங்கு முன்னேற்ற கழகம் மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய பதிவு செய்த கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தொப்பி சின்னத்தை ஒதுக்கக் கோரியிருந்ததால், தற்போது டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பிச் சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த டிடிவி தினகரனுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகவே கருதப்படுகிறது.

இதற்கிடையில், தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கமுடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், பதிவு செய்யப்பட்ட கட்சியான நமது கொங்கு முன்னேற்ற கழகம் என்ற கட்சியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படங்கள்: குமரேஷ்

சார்ந்த செய்திகள்