Khushbu hoisted the BJP flag upside down

பாரதிய ஜனதா கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு இன்று அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் பாஜக கட்சியின் கொடியை ஏற்றி வைத்துக் கொண்டாடினர். இந்நிலையில் சென்னை திநகரில் பாஜகவின் தேசிய செயலாளர் குழுவிலுள்ள நடிகை குஷ்புபாஜக கொடியைஏற்றிவைக்கும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisment

இந்த நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பு, ''திமுக அரசின் ஆறுமாத கால தேனிலவு காலம் முடிந்துவிட்டது. இனிபாஜக திமுகவிற்குபல்வேறு வழிகளில் பாடம் புகட்டும்'' என தெரிவித்தார். முன்னதாக டாக்டர் நரசிம்மன் சாலையில் பாஜக கொடியை ஏற்றி வைத்த குஷ்பு, தலைகீழாக பாஜக கொடி ஏற்றி வைத்தார். இதனைக்கண்டு அதிர்ந்த நிர்வாகிகள் உடனடியாக கொடியை கீழே இறக்கி மீண்டும் சரிசெய்து ஏற்றி வைத்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.