Skip to main content

மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கேரள சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட மாவோயிஸ்ட் ரூபேஷ்!

Published on 09/12/2017 | Edited on 09/12/2017
மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த
கேரள சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட 
மாவோயிஸ்ட் ரூபேஷ்!

போலியான ஆவணங்கள் கொடுத்து சிம் கார்டுகள் பெற்ற வழக்கில் கோவை பேக்கரியில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ரூபேஷ் மதுரை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டார். 



கடந்த 2015-ம் வருடம் கோவையில் ரூபேஷ் உள்ளிட்ட மாவோயிஸ்ட்டுகளை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது ரூபேஷிடம் இருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்த சிம் கார்டுகள் மதுரை பகுதியில் உள்ள முகவரி ஆவணங்களை வைத்து பெறப்பட்டதாக காவல்துறையினர் கண்டறிந்தனர். 

இது தொடர்பாக மதுரை மாநகர தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மதுரை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், அவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் இன்று கேரள மாநிலம் திருச்சூர், விய்யூர் சிறைச்சாலையில் இருந்த ரூபேஷை அழைத்து வந்து, காவல்துறையினர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா ரூபேஷின் காவலை ஜனவரி 4-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

- ஷாகுல்

சார்ந்த செய்திகள்