Skip to main content

காய்ச்சலுக்காக ஊசி போட்டதால் இளைஞர் மரணம் - கதறும் கர்ப்பிணி மனைவி

Published on 07/12/2018 | Edited on 07/12/2018

 

k


திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த ஆதிவரராகபுரம் சார்ந்த ஹரி - சாந்தியின் மகன் 23 வயதான கவியரசன். இவரது மனைவி கோகிலா. இவர் கர்ப்பமாகவுள்ளார். தனது மனைவியை டிசம்பர் 6ந்தேதி காலை 10 மணியளவில் தனது மனைவி  கோகிலாவை மாதந்திர பரிசோதனைக்காக வேலூர் மாவட்டம் சோளிங்கரில் உள்ள ரவிபாரதி என்கிற தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். 

 

மருத்துவமனையில் மருத்துவரை காண காத்திருந்தபோது தனக்கும் உடல்நிலை சரியில்லை சளி, இருமல், தொண்டைவலி என்று மருத்துவரிடம் காட்டியுள்ளார். 

 

கவியரசனை பரிசோதித்த மருத்துவர், கவியரசனுக்கு ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட சற்று நேரத்தில் கவியரசனுக்கு வாயில் நுரைத்தள்ளி, மூக்கில் ரத்தம் வந்துள்ளது. உடனே சோளிங்கர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் உடனடியாக வேலூரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அவர்கள் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்துள்ளனர். 

அங்கும் பரிசோதித்த மருத்துவர்கள் இங்கு முடியாது என்று சொல்லி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பபட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சரியாக மாலை 5.30 மணியளவில் கவியரசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன் பிறகு உடல் ஆய்கூறுக்கு அனுப்பப்பட்டு டிசம்பர் 7 ந்தேதி மாலை 2.30 மணியளவில் ஆம்புலனஸ் மூலம் சடலத்தை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். 

 

ஊசி போட்டதால் தான் இறந்தார் என அக்கிராம பொதுமக்கள் சோளிங்கர் திருத்தணி மாநில நெடுஞ்சாலையில் சடலத்தை ஏற்றி வந்த ஆம்புலன்சை வழிமறித்து மறியல் செய்தனர். 

 

தவறாக சிகிச்சை அளித்த சோளிங்கர் தனியார் ரவிபாரதி மருத்துவமனையை மூடக் கூறியும் அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்தால் மட்டுமே சடலத்தை பெறுவோம்  என்று சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் சுமார் இரண்டு மணிநேரமாக  கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த ஆர்.கே.பேட்டை காவல் துறையினர் சம்பவயிடத்துக்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்கிறோம் எனக்கூறினர். அதன்பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். கவியரசன் எதனால் இறந்தார் என போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்