Published on 28/11/2018 | Edited on 28/11/2018

மதிமுக உருவெடுத்த அரவக்குறிச்சி ஒன்றியத்தில் மதிமுக நிர்வாகிகள் கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர்.
அரவக்குறிச்சி ஒன்றிய மதிமுக செயலாளர் கோ.கலையரசன் தலைமையில் மதிமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கூண்டோடு விலகல் முடிவு எடுத்துள்ளனர். பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் கபனி சிதம்பரம் ஆகியோர் மீது உள்ள அதிருப்தி காரணமாக 25 ஆண்டு காலமாக மதிமுகவில் இருந்து வந்த நிர்வாகிகள் அனைவரும் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகியுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள் , 2 மாவட்ட நிர்வாகிகள், 2 நகர செயலாளர்கள் மற்றும் மாநில விவசாயிகள் அணி முன்னாள் செயலாளர் என அனைவரும் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகியுள்ளனர்.