Published on 25/09/2021 | Edited on 25/09/2021

தமிழ்நாடு காவல்துறையில் 2 ஏ.டி.ஜி.பி.க்கள் உட்பட 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், திருச்சி காவல் ஆணையராக இருந்த அருண், சென்னை போலீஸ் பயிற்சி மைய கல்லூரிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணைய செயலராக இருந்த இவர், இன்று (25.09.2021) காலை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.