நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்தவர் விஷ்ணு (23). ஸ்டுடியோவில் கேமிரா மேனாகவும் மற்றும் குறும்படம் தயாாிப்பவா்களிடம் கேமிரா மேனாகவும் பணியாற்றிவந்தார். விஷ்ணு தன்னுடைய ரசனையைப் படம் பிடித்து அதை ஃபேஸ் புக்கில் பதிவிட்டு வந்துள்ளார். அந்த ரசனை கொண்ட புகைப்படங்களைப் பாா்த்துத் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட திருப்பூரைச் சோ்ந்த கல்லூாி மாணவி கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வயது 21. விஷ்ணுவிடம் நட்பை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் தொடங்கிய நட்பு, நாளடைவில் காதலாக வளரத் தொடங்கியது.
வழக்கம்போல் பெற்றோர்கள் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தொிவித்தனர். இருந்தாலும், அந்தக் காதலர்கள் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்யாமல், பெற்றோர்களைச் சம்மதிக்க வைத்து அவர்களின் சம்மதத்துடன் ஆடம்பரமாகத் திருமணம் நடந்தது. காதலர்கள் என்ற நிலையில் இருந்து கணவன் மனைவி என்ற அந்தஸ்துக்கு உயா்ந்தனர். நாகா்கோவிலில் தனியாக வீடு எடுத்து வசித்துவந்த இருவருக்கும் திருமணம் முடிந்து 7 நாட்களிலே வாய் வார்த்தைகளால் விாிசல்கள் ஏற்படத் தொடங்கின. அது வளர்ந்து, இரவு நேரங்களில் விஷ்ணு வீட்டுக்கு வருவதையும் தவிர்த்திருக்கிறார். இதனால் அடிக்கடி நண்பர்கள் உறவினர்கள் வந்து பஞ்சாயத்துப் பேசும் அளவுக்கு இருவருடைய காதல் வாழ்க்கை கசக்கத் தொடங்கியது.
'ஒரு கட்டத்தில் கீதா தாலியைக் கழற்றி வைத்துவிட்டு எனது அம்மா வீட்டுக்குச் சென்று விடுவேன் எனப் பேச', அதற்கு விஷ்ணு, 'அப்படினா நீ தாலியைக் கழற்று' எனக் கூற ஒருத்தருக்கு ஒருத்தர் ஆத்திரத்தைக் காட்ட, இரண்டு நாட்களுக்கு முன், அதாவது திருமணம் முடிந்த 30 ஆவது நாள், இரவு தாமதமாக வந்த விஷ்ணுவைக் கண்டித்து கீதா தாலியைக் கழற்றி கீழே வைத்திருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த விஷ்ணு, படுக்கையறைக்குச் சென்று திருமணத்துக்கு உடுத்திய வேட்டி சட்டையை அணிந்துகொண்டு தூக்கில் தொங்கினார். கணவனை காப்பற்ற மனைவி கீதா எவ்வளவோ முயன்றும் முடியாததால், அந்த ஆத்திரத்தில் கத்தியை எடுத்து தன்னுடைய கழுத்தையும் அறுத்துத் தற்கொலைக்கு முயன்றவரை அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் காப்பாற்றி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்த கீதா, தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் மீண்டும் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்ய முயன்றார். இதற்கிடையில் உடற்கூறு செய்த கணவனின் உடலைப் பார்க்க வேண்டுமென்று கதறி அழுததால் மருத்துவமனையில் இருந்து கழுத்தில் கட்டுடன் கீதாவை உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது கழுத்தில் இருந்த கட்டை அவிழ்த்து வீசிவிட்டு மீண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதனால் மீண்டும் கீதாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.