அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பு ஒன்றை இன்று (19/07/2021) வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, "கட்சியின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.ராஜன், மோசஸ் ராமச்சந்திரன், லதா ராமச்சந்திரன், கிருஷ்ணகுமார், மாடசுவாமி, தென்கரை மகராஜன், பாலசுப்பிரமணியன், ஜெயந்தி, கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் டோமினிக், வரதராஜன் ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.