
தமிழ்நாடு- கர்நாடகா எல்லையில் உள்ள ஈரோடு மாவட்டம், தாளவாடி பண்ணை வீட்டிற்கு வந்த பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரை காண ரசிகர்கள் குவிந்தனர்.
பண்ணை வீட்டிற்கு தனது நெருங்கிய நண்பரும், நடிகருமான டாலி தனஞ்செய்யை அழைத்துச் சென்ற நடிகர் சிவராஜ்குமார் விவசாய தோட்டம், பண்ணை வீட்டைப் பார்வையிட்டார். அப்போது, அங்கு அவரின் தந்தையும், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவருமான மறைந்த நடிகர் ராஜ்குமார் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். நடிகர் சிவராஜ்குமார் தாளவாடி வந்துள்ளதை அறிந்ததும் கர்நாடக மாநிலத்தின் மைசூர், சாம்ராஜ் நகர், கொள்ளேகால், குண்டல்பேட் பகுதியை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் தாளவாடிக்கு படையெடுத்தனர்.
பின்னர், பண்ணை வீட்டின் முன் திரண்டிருந்த கன்னட திரைப்பட ரசிகர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் இரு நடிகர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.