திமுக பொதுச்செயலாளர் நண்பர் துரைமுருகன் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்தேன். அவர் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 8, 2021
அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் கரோனா தொற்று சில தினங்களாக அதிகம் பாதித்து வருகிறது. இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கரோனா தொற்று இன்று காலை உறுதி செய்யப்பட்டது. துரைமுருகன் 2வது டோஸ் கரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்ட நிலையில், அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், துரைமுருகன் விரைவில் குணமடைய அவருக்கு நடிகர் கமல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.