Skip to main content

காடுவெட்டி குரு காலமானார்

Published on 25/05/2018 | Edited on 26/05/2018
guru

 

வன்னியர் சங்கத்தலைவரும், பாமகவின் முன்னணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான காடுவெட்டி ஜெ.குரு ( 57) காலமானார். 

 

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சைபெற்று வந்தார். கடந்த சில நாட்களாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிக்சிசை பெற்று வந்தார்.  இந்நிலையில் இன்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

 

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் பிறந்த குரு, பாமக சார்பில் 2முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.  ல் ஆண்டிமடம், 2011ல் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவர் ஜெ.குரு.


 ஜெ.குரு நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஒரு ஆண்டாக சிரமப்பட்டு வந்தார்.  புத்தாண்டு தினத்தன்று திடீரென்று உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும்,அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததை அடுத்து,  ஜெ.குரு உடல்நலம் பெற வேண்டி பா.ம.க.வினர் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.  பாமக இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணி மற்றும் அவரது மனைவி சவுமியா அன்புமணி ஆகியோர் வடபழனி முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார்கள். 


இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.

சார்ந்த செய்திகள்

Next Story

காடுவெட்டி படத்தின் ரிலீஸ் அப்டேட்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
rk suresh kaduvetti release update

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் 'காடுவெட்டி' படத்தில் நடித்து வருகிறார். சோலை ஆறுமுகம் இயக்கியுள்ள இப்படத்தில் சுப்பிரமணியம் சிவா, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுபாஷ்சந்திரபோஸ், பரமசிவம் உள்ளிட்ட நான்கு பேர் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாதிக் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் டீசர் 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த பொங்கலை முன்னிட்டு படத்தின் முதல் பாடலாக ‘வீர பரம்பரடா...’ எனும் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இதனைத் தொடர்ந்து அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. இதையொட்டி நடந்த ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே. சுரேஷ் கலந்து கொண்டார். ட்ரைலரில் படம் விரைவில் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 15 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய இரண்டு புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

Next Story

'எங்ககிட்ட வச்சுக்கிட்டா அருவாளை தான் எடுப்போம்' - 'காடுவெட்டி' டீசர் வெளியீடு

Published on 03/06/2022 | Edited on 03/06/2022

 

'Kaduvetti' Teaser Released

 

'விசித்திரன்' படத்தை தொடர்ந்து நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ் 'காடுவெட்டி' படத்தில் நடித்து வருகிறார். சோலை ஆறுமுகம் இயக்கியுள்ள இப்படத்தில் சுப்பிரமணியம் சிவா, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுபாஷ்சந்திரபோஸ், பரமசிவம் உள்ளிட்ட நான்கு பேர் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாதிக் இசையமைத்துள்ளார். 

 

இந்நிலையில் 'காடுவெட்டி' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள், கொஞ்சம் குடும்ப பாசம் நிறைந்து  வெளியாகியிருக்கும் இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம்  பா.ம.க-வை சார்ந்த மறைந்த காடுவெட்டி குரு-வின் வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.