jullikattu juli's new transformation

பிக்பாஸ் சீசன் நான்கு விரைவில் துவங்கவுள்ளது, பிக்பாஸ் நிகழ்ச்சி என்று கூறும்போது சட்டென்று நினைவுக்கு வருவது ஜல்லிகட்டு ஜூலிதான், ஜல்லிகட்டு போராட்டத்தில் எடுத்த அத்தனை புகழும் பிக்பாஸில் காற்றில் பறந்துவிட்டது. இந்தநிலையில் தனியார் டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளர் வாய்ப்பு கிடைத்தும் அந்தளவு பப்ளிசிட்டி கிடைக்கவில்லை. தொடர்ந்து சினிமா வாய்ப்பு கனவில் இருந்த ஜூலியின் கதாநாயகி கனவும், முழுமையடையவில்லை.

Advertisment

இந்தநிலையில் கரோனா லாக் டவுனில் சினிமா துறையே முடங்கிப்போன நிலையில், சில நடிகைகள் சர்ச்சையை கிளப்பி நாங்கள் இருக்கிறோம் என்று காட்டினார்கள். அதே பாணியில் பிக்பாஸ் ஜூலியும் கடந்த மாத 24மணிநேரத்தில் இந்தியாவில் உள்ள முப்பத்தாறு மாநில கலாச்சார உடை அணிந்து போட்டோ சூட் நடத்தினார்.

Advertisment

ஆனால் அதுவும் பலன் தராத நிலையில், தற்போது அமலாபால், அஞ்சலி வரிசையில் லாங் டிரைவ் சைக்கிளிங் பயிற்சியில் இறங்கியுள்ளார் ஜூலி. இதற்காக ஈ.சி.ஆர். சாலையில் வார இறுதி நாட்களில்தன்நண்பர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.