Published on 05/12/2018 | Edited on 05/12/2018

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு ஜெயலலிதா மரணம் அடைந்தார். இன்று ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனால் அதிகாலை முதலே தமிழகம் முழுவதிலுமிருந்து வந்த அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காலையில் முதல் நபராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும், அவரது கணவர் மாதவனும் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.