Skip to main content

ஜெ. மரண விசாரணை: டாக்டர் சிவக்குமார் ஆஜர்

Published on 14/03/2018 | Edited on 14/03/2018
sivakumar jayalalitha

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி பலதரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

ஜெயலலிதாவின் குடும்ப டாக்டரான டாக்டர் சிவக்குமாரிடமும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதனை ஏற்று நீதிபதி ஆறுமுகசாமி முன்பு டாக்டர் சிவக்குமார் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

sivakumar jayalalitha

 

இந்த நிலையில் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர். இதன்படி 2-வது முறையாக டாக்டர் சிவக்குமார் இன்று ஆஜரானார். காலை 10.30 மணி அளவில் சேப்பாக்கத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜரான சிவக்குமாரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். 
 

சார்ந்த செய்திகள்