Skip to main content

ஜெ.வுக்கே பயப்படாத நாங்கள் எடப்பாடியை கண்டா பயப்பட போறோம் - ஆசிரியர்கள் பேட்டி

Published on 29/01/2019 | Edited on 29/01/2019
teachers interview


கடந்த 7 நாட்களாக நடந்து வந்த ஆசிரியர்கள் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அரசின் மிரட்டலையடுத்து இன்று சில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனா். 
 

          இந்த நிலையில் பணிக்கு திரும்பிய ஆசிரியர்களிடம் நாம் பேசியபோது, 2003-ல் ஜெயலலிதாவுக்கே பயப்படாத இந்த ஆசிரியர்கள் கூட்டமைப்பு  எடப்பாடியை கண்டா பயப்பட போறோம். அது ஓரு போதும் நடக்காது தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தில் நாங்கள் பணிக்கு செல்லவில்லை. மாணவா்களின் நலன் கருதி தான் பணிக்கு சென்று இருக்கிறோம். அதனால் எங்கள் போராட்டம் முடிவக்கு வந்ததாக இந்த அரசு கனவு காண வேண்டாம்.
 

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களின் போராட்டம் தொடரும். தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பட்சத்தில் 10வது கோரிக்கையாக அந்த தற்காலிக ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைப்போம். 
 

அதிகாரத்தை வைத்து கொண்டு உள்ளாட்சி தோ்தலை கூட சந்திக்க பயப்படுறது இந்த அரசு.  அதே போல் தான் எங்கள் சங்கத்தின் பிரதிநிதிகளை கூட சந்திக்க பயப்படுகிறது என்றனா். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.