Skip to main content

''நிலைமையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது'' - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்! 

Published on 19/08/2021 | Edited on 19/08/2021

 

'' It's scary when you think about the situation '' - PTR Palanivel Thiagarajan!

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதற்கடுத்த நாளே வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. 

 

இன்று (19.08.2021) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக இருப்பதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மேலும் அவர் பேசியுள்ளதாவது, ''பல விஷயங்களில் முடிவெடுக்க முடியவில்லை.  தமிழகத்தின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்ற முடியாததற்கு நிதிச் சூழல்தான் காரணம். அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். ஆனால் நிதிச் சூழல் மந்த நிலையில் உள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்