'' It has become their habit to create fear that does not exist '' - Congress MP Manikkam Tagore!

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மக்கள் மத்தியில் கேரள அரசியல் கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும், இதைத் தமிழக கட்சிகள் ஒன்றாக இணைந்துஎதிர்க்கும் எனகாங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

Advertisment

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட வலியுறுத்தி கேரள காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தமிழக எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில், ''அணை பாதுகாப்பாகப் பலமாக இருக்கிறது. அணைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தேவையில்லாமல் இவர்கள் திருப்பி திருப்பி இதைப் பிரச்சனை ஆக்குவது கேரள அரசியல்வாதிகளின் வழக்கமாகிவிட்டது. இல்லாத ஒரு பயத்தை மீண்டும் மீண்டும் உருவாக்குவது கேரள அரசியல்வாதிகளுடைய பழக்கமாகிவிட்டது. இதை நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.