Skip to main content

மத்திய அரசின் பேச்சை கேட்டு அரசுபள்ளிகளை மூட தமிழக அரசு நினைப்பது கண்டிக்கத்தக்கது-ஜீ.ராமகிருஷ்ணன்

Published on 14/09/2018 | Edited on 14/09/2018

 

cpm

 

திருவாரூர் வந்திருந்த  சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷணன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார், அதில்
 

"தமிழகத்தல் மணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள 3 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட மத்திய அரசின் முடிவின்படி தமிழக அரசு அறிவித்திருப்பது தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் செயலாகும். தமிழக அரசின் இந்தசெயல் வன்மையாக கண்டிக்கதக்கது. அரசு பள்ளிகளை மூடுவதை விட்டு விட்டு மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

.

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் வெளியிட்டுள்ள 18 பக்கம் அறிக்கையில் கார்பரேட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை திரும் பெறாவிட்டால் வங்கிகள் மட்டுமின்றி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கும்,  வாரக் கடன் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்காமல் ரூ 4 லட்சம் கோடி வாரக் கடனை தள்ளுபடி செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக தொழில், விவசாயம், பொருளாதாரம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

பெட்ரோல் டீசல் வரலாறு காணத விலை உயர்வால் நாட்டின் பொருளாதார நிலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பியும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாருர், நாகை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. 80% நேரடி நெல் விதைப்பில் முளைத்த சம்பா பயிர்கள் கருகி வருகிறது. இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். போர்கால அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

தமிழகத்தில் ரெய்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஊழல் செய்த அமைச்சர்கள் மற்றும் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்". என்றார்  ராமகிருஷ்ணன்.

சார்ந்த செய்திகள்

Next Story

திண்டுக்கல் தொகுதியில் வீதி வீதியாக வாக்கு கேட்ட உடன் பிறப்புகள்!

Published on 13/04/2024 | Edited on 14/04/2024
dmk who voted street by street for the cpm

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எஸ்டிபி கட்சியில் முகமது முபாரக், பா.ம.க.வில் திலகபாமா, நாம் தமிழர் கட்சி உட்பட சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் போட்டி போடுகிறார்கள். இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சியினர் மக்களை சந்தித்து நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை ஆதரவு திரட்டியும் வருகிறார்கள்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாநகரில் உள்ள மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் கிழக்கு பகுதிசெயலாளரான ராஜேந்திரகுமார், வடக்கு பகுதி செயலாளரான ஜானகிராமன், மேற்கு பகுதி செயலாளரான அக்கு, தெற்கு பகுதி செயலாளரான சந்திரசேகர் ஆகிய கட்சி பொறுப்பாளர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து வார்டு பொறுப்பாளர்களுடன் கவுன்சிலர்களையும் அழைத்துக் கொண்டு திண்டுக்கல் மாநகரில் உள்ள 48வார்டுகளிலும் உள்ள பொதுமக்களை வீதி வீதியாக சந்தித்து சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிடும் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்கள்.

dmk who voted street by street for the cpm

இதில் 17வதுவார்டு மாநகர கவுன்சிலரான வெங்கடேஷ் கட்சி பொறுப்பாளர்களுடன் அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் பிட் நோட்டீஸ்களை கொடுத்து அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் இருகரம் கூப்பி ஓட்டு கேட்டார். அதேபோல் மற்ற பகுதிகளிலும் மேயர், துணை மேயர் பகுதிச் செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் கட்சிப் பொறுப்பாளர்கள் திண்டுக்கல் மாநகரில் உள்ள மக்களை சந்தித்து அவர்களிடம் கடந்த மூன்றாண்டு தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களையும், சலுகைகளையும் கூறி வரக்கூடிய தேர்தலில்  சச்சிதானந்தத்திற்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பிட் நோட்டீஸ்களையும் கொடுத்து ஆதரவு திரட்டினார்கள்.

இப்படி திடீரென ஒரே நேரத்தில் திண்டுக்கல் மாநகரில் அனைத்து வார்டுகளிலும் உபிக்கள் தோழர் சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்கு கேட்டது தேர்தல் களத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“நமக்குள் சண்டை வேண்டாம், ஒதுங்கிப் போய் விடுவோம்” - திண்டுக்கல் சீனிவாசன்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Interesting thing happened when Dindigul Srinivasan and CPM candidate campaigned

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தமும், அதிமுக  கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரான முகமது முபாரக்கும்  போட்டியிடுகின்றனர். அதுபோல் பிஜேபி கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர்  திலகபாமாவும் போட்டியிடுகின்றனர். இப்படி திண்டுக்கல் பாராளுமன்ற  தொகுதியில் மும்முனை போட்டி மூலம் தேர்தல் களமும் சூடுபிடித்து வருகிறது. 

வேட்பாளர்களும்  மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணிகளில்  ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான் திண்டுக்கல் மாநகராட்சி  பகுதியான வேடபட்டி பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்  தனது ஆதரவாளர்களுடன் திறந்த ஜீப்பில் மக்களை சந்தித்து வாக்கு  சேகரித்துக் கொண்டு வந்தனர்.

அப்போது திடீரென எதிரே  எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரான முகமது முபாரக்குடன் முன்னாள் அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசனும் தனது ஆதரவாளர்களுடன் இரட்டை இலைக்கு வாக்கு  கேட்டு வந்து கொண்டிருந்தார். இப்படி இரண்டு வேட்பாளர்களும் தனது  ஆதரவாளர்களுடன் எதிரெதிரே சந்தித்துக் கொண்டனர். அப்போது இரண்டு  வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கைகூப்பி வணங்கிக் கொண்டனர். 

அப்போது உடன் இருந்த சீனிவாசனோ, சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை பார்த்து ‘நல்வாழ்த்துக்கள் சச்சிதானந்தம் நமக்குள் சண்டை வேண்டாம் நாம்  ஒதுங்கி சென்று விடுவோம் மக்களிடம் ஆதரவு கேட்போம் யாருக்கு ஆதரவு  அளிக்கிறார்களோ அதை நாம் ஏற்றுக் கொள்வோம் மக்கள் தீர்ப்பே மகேசன்  தீர்ப்பு...’ என்று நகைச்சுவையாக பேசினார். அதைக் கண்டு கூட்டத்தில் இருந்த  இரண்டு கட்சி ஆதரவாளர்களுமே சிரித்து விட்டனர். அதைத் தொடர்ந்து  இரண்டு வேட்பாளர்களும் தனது ஆதரவாளர்களுடன் ஒதுங்கிச் சென்றனர்.