Skip to main content

திருச்சியில் தூய்மை நகர போட்டிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

Published on 08/12/2017 | Edited on 08/12/2017
திருச்சியில் தூய்மை நகர போட்டிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்!



திருச்சியின் இதய பகுதி பாலக்கரை காந்தி மார்க்கெட். மாநகராட்சியாக மாறியும், தூய்மை நகர பட்டியலில் 3ம் இடம் பிடித்து இருந்தாலும், திருச்சியில் போக்குவரத்து நெரிசல் என்பது தொன்று தொட்டு இருக்கிறது.

இதனால் திருச்சி மாநராட்சி தானா? என்கிற சந்தேகம் அடிக்கடி எழும். அதேபோல திருச்சி காந்திமார்க்கெட், மரக்கடை, வெல்லமண்டி, வெங்காய மண்டி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் காலையில் மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் வைத்யநாதன், உதவி நிர்வாக பொறியாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 100 ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர்.



2 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 2 லாரிகள் கொண்டு வெங்காய மண்டி, வெல்லமண்டி, கமான் வளைவு, காந்திமார்க்கெட் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக நடத்தப்பட்டு வந்த சுமார் 75 கடைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. சில கடைகள் முன் போடப்பட்டு இருந்த கீற்று மற்றும் தகர கொட்டகைகளும் அகற்றப்பட்டன.

எம்.ஜி.ஆர். சிலை அமைந்துள்ள மரக்கடை இறக்கத்தில் நாற்காலி, மேஜை, பெஞ்சு மற்றும் மர பலகைகள் தயாரிப்பில் ஈடுபட்ட வியாபாரிகள், தொழிலாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நீதிமன்ற உத்தரவு பெற்று நடத்தப்படுவதாக ஒரு கடைக்காரர் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து கொண்டுடிருந்தார். நான் நீதிமன்றத் தடை அணை வாங்கியிருக்கிறேன் என்று நோட்டிஸ் ஒட்டியிருந்தது.

திருச்சி மாநகர் முழுவதும் தூய்மை நகர போட்டிக்கு தயார் ஆகி கொண்டுயிருக்கும் நிலையில் அதற்கான தயார் செய்வதற்கான ஒரு பகுதி தான் மாநகரில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம் என்றார்கள் மாநாகரட்சி நிர்வாகிகள்.

- ஜெ.டி.ஆர்

சார்ந்த செய்திகள்