Skip to main content

காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு!

Published on 09/07/2022 | Edited on 09/07/2022

 

bb

 

கர்நாடகாவின் அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து 5000 கனஅடியும், கே.எஸ்.ஆர் அணையிலிருந்து 13,286 கன அடியும் என மொத்தம் 18 ஆயிரம் கனஅடிக்கு மேலாக நீர் திறக்கப்பட்டுள்ளது.  காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாகவே இடைவிடாது கனமழை பொழிந்து வருகிறது. காவிரி ஆற்றில் நீர் திறப்பு தற்பொழுது அதிகரித்துள்ளதால் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு விரைவில் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்