Skip to main content

காட்டுமன்னார்கோயில் அருகே இடி விழுந்து இரண்டு பெண்கள் பலி!!

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

incident in kattumannarkovil

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சித்தமல்லி கிராமத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த, அதே கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் மனைவி ஆனந்தி (35), அறந்தாங்கி கிராமத்தைச் சேர்ந்த லூர்துசாமி மனைவி மரிய நட்சத்திரம் (60) ஆகிய இருவரும் இடிவிழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சோழதரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதி ஊர்வலத்தில் விழுந்த இடி; உடலை தூக்கி சென்றவர் உயிரிழப்பு

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

 The thunder fell on the funeral procession; The person who carried the body is a casualty

 

மதுரையில் இறுதி ஊர்வலத்தின் போது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மதுரை மாவட்டம் கீரனூரில் இறுதிச் சடங்கு ஊர்வலம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் இறந்தவர் உடலைத் தூக்கிச் சென்று இளையராஜா (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்த அனைவரும் மதுரை மற்றும் திருப்புவனம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறுதி ஊர்வலத்தில் இடி விழுந்து ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

Next Story

தமிழக ஆளுநரைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Black flag struggle against Tamil Nadu Governor in Kattumannarkoil

 

காட்டுமன்னார்குடி வட்டம் மா. ஆதனூர் கிராமத்திற்கு நந்தனார் குருபூஜை நிகழ்ச்சிக்காகத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருகை தந்தார். இவர் தமிழகத்தில் சனாதனத்தை ஆதரித்துப் பேசியதைக் கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருப்புப் பட்டை அணிந்தும், கருப்புக் கொடி ஏந்திப் போராட்டம் நடைபெற்றது. 

 

போராட்டத்திற்குக் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டக் குழு உறுப்பினர்கள் இளங்கோவன், புகழேந்தி, வெற்றி வீரன், நகர அமைப்பாளர் மணிகண்டன், குமராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், புஷ்பராஜ், முனுசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் முருகவேல் மற்றும் தோழர்கள் நீலமேகன், ராஜேந்திரன், மணி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

மாமேதை கார்ல் மார்க்ஸ், சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரியார், நந்தனார் கொள்கைகளைத் திரித்து பொது மேடையில் சனாதன கொள்கைகளைப் பேசி வருவதாகவும் தமிழக மக்களுக்குத் தொடர்ந்து ஆளுநர் துரோகம் விளைவித்து வருவதாகவும் கண்டனக் கோஷங்களை எழுப்பினார்கள். இதில் 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.