Published on 21/10/2021 | Edited on 21/10/2021
![incident in chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/kTDHxF5fVN7lghSSGzU0cAUjoqLs-X04HaT53gfeJVI/1634809030/sites/default/files/inline-images/555_24.jpg)
சென்னையில் பூட்டப்பட்ட வீட்டில் மத்திய உளவுப்பிரிவு உதவி ஆய்வாளரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு அயோத்தியபுரம் குடியிருப்பில் மத்திய உளவுப்பிரிவில் உதவு ஆய்வாளராக பணியாற்றிவந்த ரவீந்திரன் வாழ்ந்துவந்த நிலையில், தற்பொழுது அழுகிய நிலையில் அவரது சடலம் அந்த வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரவீந்திரனுக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்று மணமுறிவு பெற்ற நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மத்திய உளவுப்பிரிவு அதிகாரியின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.