கோப்புப்படம்
தைப்பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டியுள்ளது. நேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு முடிந்த நிலையில், இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் ராமச்சந்திரன், தமிழரசன் எனும் இரண்டு வீரர்கள் முறைகேடாக விளையாடியது தெரியவந்துள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டில் 17 காளைகளை பிடித்து மூடுவார்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் முதலிடத்தில் உள்ள நிலையில் போலியான ஆவணங்களைக் கொடுத்து வேறு ஒருவர் பெயரில் வழங்கப்பட்ட சீருடையை அணிந்து கொண்டு விளையாடியது தெரியவந்துள்ளது. காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல் 6 காளைகளை பிடித்து மூன்றாவது இடத்தில் உள்ள தமிழரசன் என்பவர் கார்த்திக் என்பவரது சீருடையை அணிந்து கொண்டு விளையாடியது தெரியவந்துள்ளது. ஆள்மாறாட்டம் செய்துதை கண்டுபிடித்த வருவாய் துறையினர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களைச் சரிபார்த்ததில் இருவரும் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்போது இருவரும் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.