Skip to main content

இளவரசி, சுதாகரனின் 6 சொத்துகள் அரசுடைமை!

Published on 07/02/2021 | Edited on 07/02/2021

 

ilavarasi, sudhakaran properties chennai district collector

இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

 

சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் 14/02/20217 அன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின் படி, சென்னை வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட இளவரசி, சுதாகரனின் பெயரிலுள்ள 6 சொத்துகள் அரசின் சொத்து என உரிமை மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை டிடிகே சாலை ஸ்ரீராம் நகரில் உள்ள லெக்ஸ் பிராப்பர்டி, டெவலப்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. சென்னை வாலஸ் தோட்டத்திலுள்ள 5 சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாளை (08/02/2021) சசிகலா தமிழகம் திரும்ப உள்ள நிலையில் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மரண படுக்கையில் கணவர்; நிலத்தை அபகரிக்க வெற்று பத்திரத்தில் ரேகை உருட்டிய அண்ணன் குடும்பத்தினர்; மனைவி கண்ணீர் புகார்!

Published on 05/05/2022 | Edited on 05/05/2022

 

husband properties asset wife complaint at salem district in mettur

 

மரணப்படுக்கையில் கிடந்த கணவரிடம் அவருடைய அண்ணனும், உறவினர்களும், சொத்தை அபகரிக்கும் நோக்கில் வெற்று பத்திரத்தில் கையெழுத்து, கைரேகைகளும் உருட்டியதாக சேலம் பெண் புகார் அளித்துள்ளார்.

 

மேட்டூர் சின்ன கம்மம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி அலமேலு (வயது 32). பி.ஏ., பட்டதாரி. இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. கணேசன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவருடைய வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு உள்ளது. கணவரின் சிகிச்சை செலவுக்காக அலமேலு, தனக்குத் தெரிந்த சிலரிடம் வட்டிக்குக் கடன்  வாங்கியிருந்தார். 

 

இந்த நிலையில், சேலம் காந்தி சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மே 14- ஆம் தேதி கணேசனை சிகிச்சைக்காக சேர்த்தனர். பரிசோதனையில், அவருடைய இரண்டு சீறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. 

 

இதற்கிடையே, கணேசனின் அண்ணன் ரத்னம், அவருடைய மகன் ரவீன்குமார், மகள் உஷாராணி, இவருடைய கணவர் அருள் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். கணேசனை தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும், ஓய்வு எடுத்துவிட்டு வரும்படியும் கூறி, அலமேலுவை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 

 

ஓரிரு நாள்கள் கழித்து அலமேலு, மருத்துவமனைக்கு வந்தார். அங்கு கணவரின் உறவினர்கள் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கணவரின் படுக்கைக்கு பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தார். அப்போது அவர்கள், கணேசனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்காக கையெழுத்துப் போடுமாறும் கூறி உறவினர்கள் அவரிடம் சில பத்திரங்களில் கையெழுத்து மற்றும் கைரேகையைப் பெற்றதாக கூறியுள்ளனர். 

 

கணவர் பெயரில் சொந்தமாக ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கில் அவருடைய உறவினர்கள் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து, கைரேகை பெற்றிருப்பதாக சந்தேகம் அடைந்தார். இதையடுத்து அலமேலு, சேலம் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், முதல்கட்டமாக கணேசன் கையெழுத்திட்ட ஒரே ஒரு வெற்றுத்தாள் மட்டும் கைப்பற்றினர். 

 

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட காணொலி பதிவுகள், கைரேகை பதிவு செய்யப்பட்ட பத்திரங்களையும் உடனடியாக சமர்ப்பிக்கும்படி ரத்தினத்தை எச்சரித்தனர். இது ஒருபுறம் இருக்க, கணேசனுக்கு உடல்நலம் மேலும் மோசம் அடைந்தது. சிகிச்சை பலனின்றி அவர் ஏப். 18ம் தேதி இறந்துவிட்டார். அங்கு வந்த ரத்தினத்தின் குடும்பத்தினர், சடலத்தை எடுக்க விடாமல் தகராறு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள், அவர்களை சமாதானப்படுத்தி, சடலத்தை அடக்கம் செய்தனர். 

 

இந்த நிலையில் அலமேலு, சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு புதன்கிழமை (மே 4) வந்தார். அவர் எஸ்பியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், என்னுடைய கணவரை ஏமாற்றி வெற்று பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டு, எனக்கு கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். 

 

இந்த புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார். 

 

Next Story

சொத்துக்களை வாங்கிக் குவித்த கே.சி.வீரமணி... வழிகாட்டிய முக்கிய தொழிலதிபர்!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

 

ADMK LEADER AND FORMER MINISTER KC VEERAMANI PROPERTIES ASSET

 

கடந்த 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார் கே.சி.வீரமணி. அப்போது மாவட்டச் செயலாளராக இருந்தாலும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. வேலூர் எம்.எல்.ஏ.வாக இருந்த மருத்துவர் விஜய்- க்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

 

அமைச்சராக இருந்த விஜய் ஊழல் விவகாரம் ஒன்றில் சிக்கியதால் சசிகலா சிபாரிசில், தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் நட்பிலிருந்த கே.சி.வீரமணியை அமைச்சராக்கினார் முதல்வராகியிருந்த ஜெயலலிதா. 

 

ஜெ மறைவுக்குப் பின்னும், சசிகலா சிறைக்குச் சென்றபின் சில அமைச்சர்கள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியுடன் முரண்டுப்பிடித்து அதை வெளிப்படுத்தினர். முதலமைச்சருடன் முரண்டு பிடித்தாலும் அதைப் பொதுமக்கள் மத்தியில் வெளிப்படுத்தாமல் காரியங்களைச் சாதிக்கத் துவங்கினார்.

 

2012 முதல் 2016 காலகட்டத்தில் கல்லூரி, திருமண மண்டபம், தொழிற்சாலை, கர்நாடகாவுக்குப் பாலாற்று மணல் கடத்தல், ரியல் எஸ்டேட், நிலங்களை வாங்கிப்போடுதல், ஆந்திராவில் பால் பண்ணை, மாம்பழ கூழ் தொழிற்சாலை தொடங்கினார்.

 

2016- 2021 காலகட்டத்தில் ஹோட்டல் தொழிலில் இறங்கினார். இதற்கு வழிகாட்டியது முக்கிய சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கும் தொழிலதிபர் சேகர் ரெட்டி எனக் கூறப்படுகிறது. ஏலகிரியில் பிரம்மாண்டமான நட்சத்திர ஹோட்டல் ஒன்றை வாங்கினார், மற்றொன்றைக் கட்டினார். அதேபோல் திருப்பத்தூரில் ஒரு நட்சத்திர ஹோட்டல், திருமண மண்டபம் எனக்கட்டினார். அடுத்ததாக ஓசூரில் நட்சத்திர ஹோட்டல் கட்டினார். பெங்களூரிலும் ஒரு ஹோட்டல் என வரிசையாக கார்ப்பரேட் செயின் லிங்க் ஹோட்டல்களை உருவாக்கத் துவங்கினார்.

 

உறவுக்காரர்கள், கட்சிக்காரர்கள், குடும்பத்தினர் பெயர்களில் சொத்துக்களை வாங்கி குவித்தார். இப்போது அதில்தான் ஆதாரங்களோடு சிக்கியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 17- ஆம் தேதி அறப்போர் இயக்கத்தின் ஜெய்ராம் செய்தியாளர்களைச் சந்தித்து, "முன்னாள் அமைச்சர் வீரமணி மீது ஊழல் புகார்களை ஆதாரங்களோடு தெரிவித்துள்ளோம். 62 கோடி ரூபாய்க்கு ஊழல் மூலம் சொத்து சேர்த்துள்ளார். உறவினர்கள் பெயரில் சொத்துக்களை வாங்கி அதனை அடுத்த மாதமே தனக்கு அவர்கள் தானம் செட்டில்மென்ட் செய்ததாக ஆவணங்களை உருவாக்கியுள்ளார். 62 கோடி ரூபாய் வருவாய் வந்ததுக்கான ஆதாரமே கிடையாது" என வெளிப்படுத்தினார்.

 

அந்த புகாரின் அடிப்படையில் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விஜய் முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்து திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, சென்னை, பெங்களூர், ஏலகிரி என 35 இடங்களில் 150- க்கும் அதிகமான அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.