Skip to main content

‘இதெல்லாம் உனக்குப் புரிந்திருந்தால்..?’ -எச்.ராஜாவுக்கு பாடம் கற்பிக்கும் காக்கிகள்!

Published on 16/09/2018 | Edited on 16/09/2018
ambedkar

 

‘நான் அவன் இல்லை!’ பாணியில் எச்.ராஜா வழக்கமாகச் சொல்வதுதான் -   “நான் பேசியதை எடிட் செய்துவிட்டார்கள். மெய்யபுரம் வீடியோவே பொய்.” என்று மறுத்திருக்கிறார். ஆனாலும், தமிழக காவல்துறையினர் கொதித்துப் போய் உள்ளனர். 


அம்பேத்கர் கே என்ற காவல்துறை அதிகாரி தன்னுடைய முகநூல் பக்கத்தில், ‘குஜராத் காவல் ஆய்வாளர் வாட்சப் மெசேஜ்’ என்று குறிப்பிட்டு, கீழ்க்கண்டவாறு பதிவிட்டிருக்கிறார். 
‘சரிய்யா உன் பேச்சுக்கே வர்ரோம் எல்லாமே கரெப்ட் போலிஸ்தான் என்ன டேஷ்க்கு துப்பாக்கி ஏந்திய போலிஸ் கேட்குற அவன் தான் கரெப்ட் ஆச்சே....
#எங்க கரெப்ட் போலிஸ் பாதுகாப்பு வேணாம்னு தனியா போய் பாரேன்..
போலிஸை தரக்குறைவா பேசிட்டு 
துப்பாக்கி ஏந்திய போலிஸ் வேணும்னு கேட்கிற அனைத்து கரெப்ட் ஆளுங்களுக்குமான பதிவு இது.!’

 

ammer


அம்பேத்கரே இன்னொரு பதிவில்,   ‘ஒரு துப்பாக்கி.. ஒரு போலிஸ்.. ஆயிரம் போலிஸுக்கு சமம்னு உன்னை நினைக்க வச்சி, பக்கத்தில் உன் பாதுகாப்புக்கு நிற்கிறான் பார். நேர்மைன்னா என்ன? கடைமைன்னா என்ன? சகிபுத்தன்மைன்னா என்னன்னு அவன் பாடம் எடுத்துக்கிட்டு இருக்கான்யா உனக்கு. இதெல்லாம் புரிஞ்சிருந்தா நீ ஏன் இப்படி பேசப்போற ஷின்சான்.’ என்று எச்.ராஜாவுக்கு பாடமே நடத்தியிருக்கிறார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'காவி அம்பேத்கர் வெறுத்த நிறம் அல்ல அவர் விரும்பி ஏற்ற நிறம்''-ஹெச்.ராஜா, அர்ஜூன்சம்பத் கூட்டாக பேட்டி 

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

'Kavi Ambedkar was not the color he hated but the color he loved' - H. Raja interview

 

அண்மையில் அம்பேத்கரின் 66ஆவது நினைவு நாளின்போது இந்து மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்டிருந்த போஸ்டரில் அம்பேத்கருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக அக்கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டிருந்தார். 

 

இந்நிலையில் இன்று சினிமா சண்டை பயிற்சியாளர் கனல்கண்ணன், பாஜக பிரமுகர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, ''அம்பேத்கரே காவி அணிந்துதான் இருந்தார். அந்தப் படமே எங்களிடம் இருக்கிறது. இப்ப கூட எங்களால் காட்ட முடியும். அதை போஸ்டரில் போட்டால் உடனே காவல்துறை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கைக்கூலியாக செயல்படுமா என்ன? இதில் என்ன தேசிய பாதுகாப்பு கெட்டுப் போய்விட்டது.  அம்பேத்கர் புத்த மதத்தை தழுவினார். புத்த பிக்குகள் என்ன உடை அணிகிறார்கள். இவர்கள் யார் அதை டிடர்மைன்ட் பண்ண. எனவே ஒரு பெரிய ரவுடிகள் கூட்டத்தில் தமிழக அரசு சிக்கி தவித்து வருகிறது. நாடக காதல், ரவுடி கும்பல்கள் கையில் இருக்கிறது இந்த அரசாங்கம். காவல்துறை அந்த ரவுடி கும்பலின் ஏவல் ஆட்களாக போய் கும்பகோணத்தில் குருமூர்த்தியை கைது செய்திருக்கிறார்கள். குருமூர்த்தியை கைது செய்தது காவல்துறைக்கே அவமானம்''என்றார்.

 

'Kavi Ambedkar was not the color he hated but the color he loved' - H. Raja interview

 

அதன்பிறகு பேசிய அர்ஜுன் சம்பத், ''காவிநிறம் என்பது அம்பேத்கர் வெறுத்த நிறம் அல்ல அவர் விரும்பி ஏற்றுக் கொண்ட நிறம். புத்த மதமும் இந்து சமயத்தினுடைய ஒரு கூறு தான். இந்துவாகப் பிறந்தேன் இந்துவாக சாகமாட்டேன் என்று சொன்னது ஆதிக்க ஜாதியினருக்கும், ஜாதி வெறி கொண்டவர்களுக்கும் பாடம் புகட்டுவதற்காக, சீர்திருத்துவதற்காக அப்படி ஒரு முடிவை எடுத்தார். ஆனால் அவர் சட்டம் செய்கிற பொழுது இந்துக்கள் மட்டுமே போட்டியிட கூடிய தொகுதியை உருவாக்கினார். தனித்தொகுதி முறையை உருவாக்கினார். தனி தொகுதியில் யார் போட்டியிட முடியும் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் போட்டியிட முடியாது. மேல் சாதிக்காரர் கூட போட்டியிட முடியாது. தனித்தொகுதியில் சலுகைகளைஅனுபவிப்பவர்கள் இந்துக்களாக மட்டும் தான் இருக்க முடியும். இந்த சட்டத்தினால் தான் திருமாவளவன் இன்று வரை இந்து என்று சான்றிதழ் வைத்திருக்கிறார்''என செல்போனில் இருந்த புகைப்படத்தை எடுத்துக்காட்டினார்.

 

அப்போது குறுக்கிட்ட ஹெச்.ராஜா, ''அம்பேத்கருக்கு காவி உடை போட்டவரை கைது செய்யலாம் என்றால் வள்ளலாருக்கு திருநீறு இல்லாமல் படம் போட்டவரை கைது செய்யலாமே'' என்று ஆவேசமடைந்தார்.

 

 

Next Story

''மோடியோ, அமித்ஷாவோ சேர் மேல் நடந்து காரில் ஏறி பார்லிமென்ட்டுக்கு போவது கிடையாது''-பாஜக அண்ணாமலை பேட்டி!  

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

'' Modi, Amit Shah will not walk over and get in the car and go to Parliament '' - BJP Annamalai interview!

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

 

அதில், அரசியலமைப்பு சட்டங்களை பாஜக அரசு அவசரச் சட்டங்கள் மூலமாக அழிக்கிறது. இந்த நிலையில் இவர்கள் (பாஜகவினர்) அம்பேத்கர் நினைவு நாளை போற்றுவது வேதனை அளிக்கிறது என திருமாவளவன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர் என்ற கேள்விக்கு,

 

''திருமாவளவனைப்போல, பாலகிருஷ்ணனைப்போல அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்யக்கூடிய கட்சி பாஜக இல்லை. அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் என்பவர் வியாபாரப் பொருள் மட்டும் தான். ஆனால் பாஜக அப்படி இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். அம்பேத்கர் மத்தியப்பிரதேசத்தில் பிறந்தார். நாசிக்கில் கடைசி காலத்தில் இறைவனடி சேர்ந்தார். டெல்லியில் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த ஐந்து இடங்களை பஞ்ச தீர்த்தம் என்று சொல்கின்றோம்.

 

அம்பேத்கருக்கு நினைவிடம் கட்டிய பெருமை பாஜக அரசுக்கு உண்டு. லண்டனில் அம்பேத்கர் லாயராக பிராக்டிஸ் செய்த வீடு கடனில் இருந்ததை கூட மீட்டெடுத்தது நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து இருக்கின்றோம். அதையெல்லாம் தாண்டி எஸ்.சி, எஸ்.டி சட்டம் என்பது மிக முக்கியமான சட்டம். அந்த சட்டத்தில் காங்கிரஸ் அரசு 10 வருஷமாக சேர்க்கப்படாத விஷயங்களை நாம் ஆட் பண்ணி இருக்கோம். யாரையாவது வலுக்கட்டாயமாக மொட்டை அடிக்க வைத்தால் அது குற்றம், ஊர் கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடை போட்டால் குற்றம் இதைப்போன்று புதிதான சில விஷயங்களை கூட அந்த சட்டத்தில் பாஜக கொண்டு வந்திருக்கிறது.

 

முதன்முதலாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் என்ற அற்புதமான மனிதரை நாட்டின் குடியரசுத் தலைவராக அமர்த்தி அழகு பார்த்த கட்சி பாஜக. இது போன்ற ஒவ்வொரு விஷயத்தையும் நாம் எடுத்துக்காட்டாகச் சொல்லிக் கொண்டிருக்க முடியும். அப்படி இருக்கும் பொழுது அம்பேத்கரை வைத்து வியாபாரம் மட்டும் செய்யக்கூடிய கட்சி திருமாவளவனுடைய கட்சி. குறிப்பாக ஜி.எஸ்.டி சட்டத்தைப் பற்றியே தெரியாமல் ஐந்து வருடம் ஜி.எஸ்.டி பற்றி பேசியவர் அவர். மறுபடியும் அவர் அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறை முழுமையாகப் படித்துவிட்டு வந்து பாஜக பற்றி குற்றம் சொல்லலாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். திருமாவளவன் எம்.பியாக இருக்கிறார் மோடியோ, அமித்ஷாவோ சேர் மேல் நடந்துபோய் காரில் ஏறி பார்லிமெண்ட்டுக்கு போவது கிடையாது. அந்த மாதிரி போய்விட்டு கண்ணாடி கூண்டிலிருந்து கொண்டு கல் எறிந்து கொண்டிருக்கிறார் திருமாவளவன்'' என்றார்.