'If BJP wins, they will call it a disorder' - Pon.Radhakrishnan about the voting machine!

Advertisment

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படஇருக்கிறது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள்மத்திய இணையமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் வாக்கு இயந்திரத்தில் கோளாறு நடைபெற வாய்ப்புள்ளதாஎன்றகேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ''மின்னணு வாக்கு இயந்திரத்தில் கோளாறு என கூறுபவர்களுக்குத்தான்கோளாறு உள்ளது. இதுவே காங்கிரஸ் வென்றால் இயந்திரத்தில் கோளாறு இல்லை என்பார்கள். பாஜக வென்றால் கோளாறு என்பார்கள்'' என்றார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்குஇடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.