Published on 22/09/2021 | Edited on 22/09/2021

தமிழ்நாட்டில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசின் நிதித்துறைத் துணைச் செயலாளராக பிரதிக் தயாள் நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை இணைச் செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் சிறப்புச் செயலாளராக கலையரசி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராக பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் ஆட்சியராக மதுபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.