Skip to main content

நான் மேல்முறையீடு செய்ய மாட்டேன்: தங்க தமிழ்செல்வன் பேட்டி

Published on 14/06/2018 | Edited on 14/06/2018
Thanga Tamil Selvan


டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.

 

 

பின்னர், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தலைமையிலான டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பல நாட்கள் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர், கொறடா, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்காக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் பலர் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
 

தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாக 18 எம்எல்ஏக்களையும் டிடிவி தினகரன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 

 

சென்னை அடையாறு இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். மேலும் வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.  
 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன், தீர்ப்பு நிச்சயம் எங்களுக்கு சாதமாக வரும். அதன் பின்னர் நாங்கள் எங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

 

தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரவில்லை என்றால் மேல்முறையீடு செய்வீர்களா என்ற கேள்விக்கு, நிச்சயம் எங்களுக்கு சாதகமாகத்தான் வரும். அப்படி நீங்கள் கூறியபடி வந்தால், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று நான் மேல்முறையீடு செய்ய மாட்டேன். மற்றவர்கள் அதுபற்றி முடிவை சொல்வார்கள்/ என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு சீட்டை டி.டி.வி.தினகரன் காலில் விழுந்து பெற்றிருக்கிறார்” - தங்க தமிழ்ச்செல்வன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thanga tamilselvan was severely criticized by T.D.V.Thinakaran

திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக தேனி நேரு சிலை மும்முனை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக திறந்த ஜீப்பில் வந்தார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி  மூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் அமைச்சர்கள் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, “முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை பலப்படுத்தி ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். திண்டுக்கல் - சபரிமலை ரயில் திட்டம் கொண்டு வரப்படும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேனி, உசிலம்பட்டி, போடி ஆகிய  பகுதியில் புறவழிச்சாலைகள் புதிதாக அமைக்கப்படும்.

டிடிவி தினகரன் வனவாசம் சென்று வந்தது போல உள்ளது. மீண்டும் தேனி வந்தது என்று கூறுகிறாரே என்ற கேள்விக்கு ? அவர் அப்படியே சென்று இருக்கலாம் .தேர்தல் என்பது மக்களோடு மக்களாக களத்தில் இருந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்திருக்க வேண்டும். 14 வருடம் வன வாசம் சென்று மீண்டும் வந்திருப்பதாக கூறும் டிடிவி தினகரன், அப்படியே சென்றிருக்க வேண்டியது தானே, ஏன் மீண்டும் வந்தார்? பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன், ஒரு சீட்டை காலில் விழுந்து பெற்று இருக்கிறார்.

செல்வாக்கை நிரூபிக்க ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தனித்து சுயேட்சையாக போட்டியிட வேண்டும். இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார் என்று டிடிவி.தினகரன் கேட்கிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியா கூட்டணி வெற்றி பெறும் அதன் பின்னர் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இதைப்பற்றி தினகரன் கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார்.

Next Story

தேனியில் வேட்புமனு தாக்கல் செய்த தங்க தமிழ்செல்வனுக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி வாழ்த்து

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I. Periyasamy congratulated Thanga Tamilselvan who filed his nomination

தேனி பாராளுமன்றத் தொகுதியில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் முன்னாள் மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் தேனி கிழக்கு ஒன்றியச் செயலாளர் நாராயணசாமி மற்றும் பிஜேபி கூட்டணி சார்பில் அமமுக வேட்பாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் உள்பட சில சுயேச்சைகளும் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான், போடி உள்பட ஆறு சட்டமன்றத் தொகுதியிலிருந்து 5000க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கட்சிக்காரர்களும் பெருந்திரளாக தேனி பழைய பேருந்து நிலையத்துக்கு வந்தனர். அப்பொழுது வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுடன்  அமைச்சர்களான ஐ. பெரியசாமி மற்றும் மூர்த்தி உள்பட கட்சி பொறுப்பாளர்கள் வந்தனர். அவர்களை மக்கள் மலர் தூவியும் வாழ்த்தியும் மேளதாளத்துடன்  வரவேற்றனர்.

Minister I. Periyasamy congratulated Thanga Tamilselvan who filed his nomination

அதைத் தொடர்ந்து தேனி ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்த வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியர் சஜிவனாவிடம் தனது வேட்பு மனுவை அமைச்சர்களான ஐ. பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மனுத்தாக்கல் செய்தார். அதன்பின் வெளியே வந்த திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பட்டு வேஷ்டி போத்தி வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உள்பட கட்சி பொறுப்பாளர்கள் சிலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.