
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது ரசிகர்கள் அவரது பாடல்களைப் பாடி அவருக்குப் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் திரைத்துறையினர் சார்பாகவும் அவருக்கு நினைவஞ்சலி கூட்டங்கள் நடைபெற்றது.
சென்னையில் மறைந்த பாடகர் எஸ்பிபியின் நினைவேந்தலில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், டி.ராஜேந்தர், பாடலாசிரியர் சினேகன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர், ''பாலு அண்ணன் மறைஞ்சி இன்னைக்கு ஒரு வருஷம் ஆகுது. இந்த கரோனா காலத்தில என்னால போக முடியல. என்னோட மனசுல துக்கம் இருந்துகிட்டே இருந்தது. அதை இறக்கி வைக்க ஒரு இடம் வேண்டும் என்று பார்த்தேன். இன்னைக்கு எனது கண்ணீரால் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்துகிறேன்'' என மேடையிலேயே கண்கலங்கினார் டி.ராஜேந்தர்.