
முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் 26ஆம் தேதி கைது செய்யப்பட்ட போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாகத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பள்ளியில் உள்ள சொகுசு அறைக்கு நேராக அழைத்துச் சென்று தற்போது விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், ஆபாசமாகப் பேச பயன்படுத்திய பள்ளியின் மெயில் ஐடி, பென் ட்ரைவ், சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சிவசங்கர் பாபாவின் கைரேகை பதிவை வைத்து அவர் பயன்படுத்திவந்த ரகசிய அறையைத் திறந்து சோதனையிட சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு உடல்நிலை குறைவு காரணமாகச் சிறப்புச் சிகிச்சை வேண்டும் என அரசு மருத்துவர் பரிந்துரைத்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது தொடர்பாக சிறைத்துறை பரிசீலிக்கலாம் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உடல்நல பிரச்சனைகள் உள்ளதால் தனக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என சிவசங்கர் பாபா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)