publive-image

Advertisment

'தகைசால் தமிழர்' விருதிற்காக அளிக்கப்படும் ரூபாய் 10 லட்சத்தை முதலமைச்சரின் கரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள 'தகைசால் தமிழர்' விருதினை இந்தாண்டு எனக்கு வழங்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எனது சேவையைப் பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக்கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Advertisment

இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூபாய் 10 லட்சம் தொகையினை கரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டிவரும் முதலமைச்சரின் கரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்றுவரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், இந்திய நாட்டின்விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்த அளவு பணியாற்றியுள்ளேன். சுரண்டலற்ற பொதுவுடைமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக்கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியைத் தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.