குடும்பத் தகராறில் கட்டிடத் தொழிலாளியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த விளந்தைக் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். கட்டிட தொழிலாளியான இவரும், சுரேகா என்ற பெண்ணும் ஒருவர் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு அபிநயா என்ற மகளும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர்.
சந்தோஷ் அவ்வப்போது மதுபோதையில் மனைவி சுரேகாவிடம் தகராறு செய்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். சந்தோஷ் மதுபோதையில் மீண்டும் தகராறு செய்து அடித்து துன்பறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், சந்தோஷ் மதுபோதையில் மீண்டும் தகராறு செய்து, ஆத்திரமடைந்து காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சுரேகாவை வெட்ட முயன்றார். இதில் சுதாரித்துக் கொண்ட சுரேகா, சந்தோஷிடம் இருந்த கத்தியைப் பிடிங்கி, ஆத்திரத்தில் தனது கணவர் என்றும் பாராமல், அவரது மார்பில் குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், சுரேகா விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவம் பற்றிக் கூறி, சரணடைந்தார். விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் விழுப்புரம் மேற்கு காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தனர். அதைத் தொடர்ந்து, சந்தோஷின் உடலை கைப்பற்றிப் பிரதேச பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவனை மனைவி கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.