Skip to main content

அரைநிர்வாணப்படுத்தி விசாரணை செய்த காவல் ஆய்வாளர்;30 ஆயிரம் அபராதம் விதித்த மனித உரிமைகள் ஆணையம்!!

Published on 16/10/2018 | Edited on 16/10/2018

புகார் கொடுத்தவரை அரை நிர்வாணப்படுத்தி விசாரணை செய்த காவல் துணை ஆய்வாளருக்கு 30 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

 

human rights

 

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருபவர் ரமேஷ்குமார்,குடியிருப்பின் ஒவ்வொரு வீடுகளுக்கும் தனித்தனியாக தண்ணீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு மெட்ரோ வாட்டர் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. 

 

 

இந்நிலையில் அதே பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு கீதா என்பவர் குடியேறினார். ஆனால் அவர் வீட்டுக்கான தண்ணீர் வரியை சரியாக செலுத்தாத்தால் மெட்ரோ வாட்டர் நிறுவனம் அவரின் இணைப்பை துண்டித்தது.

 

இதையடுத்து, ரமேஷ்குமாரின் இணைப்பில் இருந்து தண்ணீர் எடுத்ததால், ரமேஷ் குமார் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காத துணை ஆய்வாளர் விஜயபாண்டியன், விசாரணை என்ற பெயரில் ரமேஷ்குமார் மற்றும் அவரின் மகனை அரை நிர்வாணமாக்கி காவல் நிலையத்தில் அமரவைத்தார்.

 

இதனால் மனமுடைந்த ரமேஷ்குமார், துணை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர்  ஜெயச்சந்திரன், மனித உரிமைகள் மீறப்படுமானால் அதற்கு காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கையும் எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. 

 

அதனால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உலைச்சலுக்கு இழப்பீடாக துணை ஆய்வாளருக்கு 30 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படுகிறது. அதை பாதிக்கப்பட்டவருக்கு 4 வாரத்திற்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்

Next Story

லாக்கப் மரணம்;  கொலை குற்றவாளியான காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்ய மனு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Petition seeking transfer of police inspector convicted in connection with Lockup incident

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்பட்டாம்பாக்கம் அருகே உள்ள பி.என்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இறந்த சுப்பிரமணியம் மனைவி எஸ்.ரேவதி விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி)அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை காவல்துறை துணைத் தலைவர் டிஐஜி திஷா மிட்டலிடம் கொடுத்தார்.

அந்த மனுவில் கடந்த 2015 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம், நெய்வேலியில் ஒரு வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தில் சந்தேக விசாரணை என்ற பெயரில் அந்த சம்பவம் நடந்த பக்கத்து வீட்டில் பெயிண்டர் வேலைக்கு சென்று வேலை பார்த்து, சம்பவம் நடந்த அன்று பெயிண்ட் வேலைகக்கு செல்லாமல் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்று வந்த எனது கணவர் சுப்பிரமணியத்தை அழைத்துச் சென்ற போலீசார் அவரை காவல் நிலைய லாக்கப் பில் வைத்து அடித்து, விரல் நகங்களை பிடிங்கி சித்திரவதை செய்ததின் பேரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை போலீசார் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது உயிரிழந்தார்.

அது குறித்த வழக்கின் விசாரணையில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து, உயர் நீதிமன்ற அறிவுறுத்தல் பேரில் வழக்கு விசாரணை வரும் 1/2/24 முதல் 5/3/24 வரையில் கடலூர் மாவட்ட எஸ்சி.எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில், எனது கணவர் உயிரிழப்புக்கு காரணமான ஏ1 குற்றவாளி ராஜா என்ற காவல் ஆய்வாளர், தற்போது கடலூர் மாவட்டம், நெய்வேலி காவல் உட்கோட்ட வடலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார், அவர் பணியாற்றும் அதே காவல் உட்கோட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் பலர் அரசு தரப்பு சாட்சியங்களாக சாட்சியம் அளிக்க உள்ள நிலையில், அவர் அங்கு பணியாற்றி வந்தால் சாட்சியங்களை மிரட்டி கலைக்க வைக்க முயற்சி செய்வார் என்பதால் அவரை உடனடியாக வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் ரேவதி தெரிவித்துள்ளார்.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்  ஜி ரமேஷ் பாபு மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆறுமுகம் வழக்கறிஞர்கள், ஜோதிலிங்கம் லெனின், மாதர்  சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மேரி ஆகியோர் உடன் இருந்தனர்,

இவ்வழக்கின் எதிரிகளான ஏ1 ராஜா, கடலூர் மாவட்டத்தில் வடலூர் காவல்நிலைய ஆய்வாளராகவும், ஏ2-கே..என்.செந்தில்வேல் காஞ்சிபுரம் மாவட்டம். திருக்கழுக்குன்றத்தில் உதவி ஆய்வாளராகவும், ஏ3 ஜே. செளமியன், கடலூர் மாவட்டம். கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வழக்கில் உள்ள 3 எதிரிகளும் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்; ரூ.36 லட்சம் அபராதம் வசூல்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Surcharge on omni buses; A fine of Rs.36 lakh was collected
கோப்புப்படம்

பொங்கல் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து தமிழகம் முழுவதும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சிறப்புக் குழுக்கள் மூலம் தமிழக போக்குவரத்து சார்பில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி 15 ஆயிரத்து 650 ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்த ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளிடம் இருந்து ரூ.36.55 லட்சம் தமிழக போக்குவரத்து சார்பில் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை தமிழக போக்குவரத்துத்துறையின் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் விதிமுறைக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளை வரை முறைப்படுத்த மார்ச் 31 ஆம் தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசங்களில் பதிவு செய்து தமிழகத்தில் சுமார் ஆயிரம் பேருந்துகள் இயங்குகின்றன. இது போன்று பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் அந்தந்த மாநிலங்களில் தடையில்லா சான்று பெற்று மார்ச் 31 ஆம் தேதிக்குள் மறுபதிவு செய்து உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் பிற மாநிலத்தில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்க அனுமதி இல்லை எனவும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.