Skip to main content

"டூரிஸ்ட் வேன் பாக்கி தராத எச்.ராஜாவுக்கு ட்விட்டர் ஒரு கேடா?" -பெருமை பேசியதற்கு பதிலடி!

Published on 19/05/2018 | Edited on 19/05/2018

ஒருவர் எவ்வளவு பெரிய வி.ஐ.பி.யாக இருந்தாலும், அவரை சாமானியர்களும் ‘நோஸ்-கட்’ செய்துவிடக்கூடிய காலம் இது!

 

h raja


பா.ஜ.க. தேசிய செயலர் ராஜா, மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பெருமை சேர்ப்பதாக எண்ணி ‘காவிரி மேலாண்மை வாரியம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சம்மதம். 50 ஆண்டுகால திமுகவின் துரோகத்திலிருந்து தமிழகம் காப்பாற்றப்பட்டது’ என்று ட்விட் செய்திருக்கிறார்.  

 

 

இந்தப் பதிவுக்கு இப்படி ஒரு பதில் வரும் என்று எச்.ராஜா எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆம். கண்ணன் என்பவர் ‘காவேரி மேலாண்மை அமைக்குறது அப்புறம்..  நீ காரைக்குடியில் மருந்துக்கடை வச்சிருக்கும்போது, தஞ்சாவூரில் உள்ள ஒன்பது நவகிரக கோவில்களுக்கு போறதுக்கு, டூரிஸ்ட் வேன் எடுத்தியே ஞாபகம் இருக்கா? அதுக்கு வாடகை எப்ப தருவ? சொல்லுடா நாயே!’ என்று எச்.ராஜாவின் ட்விட்டுக்கு ரிப்ளை பண்ணியிருக்கிறார். 

 

twitter snapshot



எச்.ராஜா, காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மார் தட்டியிருப்பது அரசியல். கண்ணன், டூரிஸ்ட் வேன் வாடகை பாக்கியை ட்விட்டர் பதிலாக,  பொதுவெளியில், அதுவும் அநாகரீகமாக கேட்பது சொந்த விஷயம். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார் கண்ணன் என்ற பதிவர். உண்மையிலேயே, எச்.ராஜா டூரிஸ்ட் வேன் பாக்கி வைத்திருக்கிறாரா? இல்லையா? என்பதை அவர் மட்டுமே அறிவார். இதை ஒரு விவகாரமாக்கி,  ‘எச்.ராஜாவெல்லாம் காவேரி மேலாண்மை வாரியம் குறித்து எப்படி பேசலாம்? ட்விட்டரில் கருத்து கூற இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?  முதலில் டூரிஸ்ட் வேன் வாடகை பாக்கியை செட்டில் செய்துவிட்டு, அப்புறம் ஊர் நியாயம், உலக நியாயம் பேசட்டும்’ என்கிற ரீதியில், பதிலடி தருவதெல்லாம் ரொம்ப அதிகம். கருத்துச் சுதந்திரத்தை ஆளாளுக்கு உருட்டி விளையாடுகின்றனர். 

 

 

எச்.ராஜாவும் சாதாரண ஆளில்லை. ட்விட்டர் சர்ச்சைகளில் சிக்கும்பொழுது 'என் அனுமதியில்லாமல் அட்மின் பதிவு செய்துவிட்டார்' என்று சொல்வது அவரது வழக்கம். டூரிஸ்ட் வேன் பாக்கியைக் கண்ணன் கேட்டதற்கு என்ன பதில் வைத்திருக்கிறாரோ? 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகளின் அக்கவுண்ட்டை முடக்க மத்திய அரசு உத்தரவு; எக்ஸ் நிறுவனம் அதிருப்தி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 Company X is dissatisfied for Central government order to freeze pages

தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கெனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.

பஞ்சாப் - ஹரியானாவின் மற்றொரு எல்லையான காணுரியில், நேற்று (21-ஆம் தேதி) காலை முதல் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் ஹரியானா போலீசார், விவசாயிகளைக் கலைத்து வருகின்றனர். காவல்துறையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து, பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி உயிரிழந்தார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீசார் நடத்தும் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அரசின் உத்தரவின் பேரில் சில கணக்குகள் மற்றும் பதிவுகள் நீக்கப்பட்டதாக எக்ஸ் (ட்விட்டர்) இன்று (22-02-24) தெரிவித்துள்ளது. 

இது குறித்து, எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் உலக அரசுகள் விவகார பிரிவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, ‘இந்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்க, குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை இந்தியாவில் மட்டும் நிறுத்தி வைப்போம். இந்த நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும், கருத்து சுதந்திரம் என்பது இந்த பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். 

எங்கள் நிலைப்பாட்டிற்கு இணங்க இந்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. எங்கள் கொள்கையின்படி, பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இந்த நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பையும் நாங்கள் வழங்கியுள்ளோம். சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய அரசின் நிர்வாக உத்தரவுகளை வெளியிட முடியவில்லை. ஆனால், வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இந்த உத்தரவை பொதுவெளியில் வைப்பது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. 

Next Story

முடங்கியது 'எக்ஸ்'

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
 Disabled 'X'

உலக அளவில் எக்ஸ் எனும் ட்விட்டர் இணையதளம் முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல பணக்காரரான எலான் மஸ்க்கால் வாங்கப்பட்ட பிறகு பல்வேறு பிரச்சனைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது ட்விட்டர். டிவிட்டருக்கு எக்ஸ் (x ) என பெயர் மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது 'x' வலைத்தளமானது உலகம் முழுவதும் முடங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பல கோடி பயனர்கள் அவதியுற்று வருகின்றனர்.