காவல்துறை அதிகாரிகள் பொறுப்புட செயல்பட வேண்டாமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
சாட்டை முருகன் என்பவர் யூ-டியூபில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். அதில் அவருக்கு நிபந்தனைகள் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், மீண்டும் முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பி வருவதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. துரைமுருகன் பேசிய விவரங்களை எழுத்துப் பூர்வமாக, தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அவ்வாறு தாக்கல் செய்யப்படாததால், முதலமைச்சர் சம்பந்தப்பட்ட வழக்கிலேயே, இந்த நிலையென்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? அவர்களின் வழக்குகள் எவ்வாறு கையாளப்படும் என நீதிபதி புகழேந்திகேள்வி எழுப்பினார். போதிய ஆதாரங்கள் இல்லாததால் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், அரசுத் தரப்பில் ஒரு வாரம் அவகாசம் கோரப்பட்டதால், விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.