திருச்சி சமயபுரம் விடுதியில் உள்ள மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட லுத்ரன் சர்ச் பள்ளியின் தாளாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருச்சி சமயபுரம் அடுத்த சிறுகனூர் லத்வியான் இவாஞ்சலின் லுத்ரன் சர்ச் பள்ளிக்கூடத்தில் இலவசமாக ஆரம்பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இதில் 53 பள்ளி மாணவிகள் படிக்கிறார்கள். இந்த வளாகத்தில் உள்ளயே மாணவிகள் தங்கும் விடுதியில் தங்க வைத்து அருகில் உள்ள அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் பள்ளியின் தாளாளரான தர்மராஜன் பாலியல் அத்துமீறலில் புகார் கொடுத்து பெற்றோர்களின் முற்றுகை போராட்டத்தால் பள்ளிக்கு வந்த சமூக பாதுகாப்பு நலத்திட்ட அதிகாரிகளின் விசாரணையில் ஈடுபட்டனர்.
கடந்த 40 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் கடந்த 2012 ஆம் ஆண்டு தாளாளராக ஓய்வு பெற்ற ஆசிரியரான தர்மராஜன் பணிக்கு சேர்ந்துள்ளார். அவர் வறுமையில் உள்ள சிறுமிகளை தனிமையில் அழைத்து இனிப்பு வழங்குவது கதைகள் கூறுவது போல அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவிகள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதில் 9 வகுப்பு, எட்டாம் வகுப்பு, 7வகுப்பு மாணவிகள் உட்ப 5 மாணவிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போஸ்கோ சட்டத்தின் கீழ் லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிந்துள்ளனர்.
தர்மராஜனை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.
மாணவிகள் தங்கும் விடுதியில் இருந்த அனைத்து குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். காப்பகம் இழுத்து பூட்டப்பட்டது. இதனால் 53 பேர் படித்து வந்த அரசு உதவி பெறும் லத்வியான் இவாஞ்சலின் லுத்ரன் சர்ச் உண்டு உறைவிட பள்ளிக்கூடம், ஒரு மாணவ ,மாணவிகளும் இல்லாமல் காலியானது..!
மாணவிகள் சிலரிடம் இது குறித்து விசாரித்த போது.. அவரு வயசான தாத்தா அவருக்கு கால்களில் புண்கள் இருக்கிறது. அவரு நடக்கமுடியாமல் சிரமப்படுவர். அவர் வெளியே நடக்கணும் என்றால் எங்களை போன்ற மாணவிகள் தான் அழைத்து செல்வார்கள். அப்போது தான் அவர் தப்பான இடங்களில் கை மேலே படும் என்றும். இதானால் மாணவிகள் புகார் கொடுத்தோம் என்றார்கள்.
வயதான காலத்தில் பள்ளி சிறுமிகளிடம் சிலுமிஷம் செய்த தர்மராஜ் மீது கடுமையான கோவத்தில் உள்ளனர் அந்த பகுதி மக்கள்.