Skip to main content

ஓரினச்சேர்க்கைக்கு ஆசைக்காட்டி இளைஞர்களிடம் நகை பறிக்கும் கேரள கும்பல்! - திடுக் தகவல்கள்..!

Published on 29/06/2018 | Edited on 29/06/2018
sumes s


ஓரினச்சேர்க்கைக்கு ஆசைக்காட்டி அழைத்து இளைஞர்களிடம் நகை பறிக்கும் கேரள கும்பலை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் இளைஞர்களை கூறி வைத்து மொபைல் ஆப் மூலம் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து அவர்களிடம் இருந்து நகைகள், சொல்போன்களை ஒரு கும்பல் பறித்து வந்துள்ளது. சமீபத்தில் இது போன்ற சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு அதிகளவிலான புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து புகார் அளித்தவர்கள் கொடுத்த தகவல் மற்றும் ஹோட்டல்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அனைத்து ஹோட்டல்களிலும் சிக்கிய ஒரு நபரின் உருவத்தை வைத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மண்ணடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த சுமேஷ், என்பவரை கைது செய்தனர்.

 

 

அப்போது சுமேஷிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இந்த கும்பல் இளைஞர்களை கூறிவைத்து, மொபைல் ஆப் மூலம் ஓரினச்சேர்க்கைக்கு குறித்த தகவல்களை பகிர்கிறது. மொபைல் ஆப்பில் வரும் இந்த தகவலை கண்டு விருப்பம் கொள்பவர்கள் அதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் அந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின், எந்த இடத்திற்கு வரவேண்டும் என்ற தகவல் அதில் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அந்த ஆப்பில் வர சொல்லும் ஹோட்டல்களுக்கு நேரில் செல்லும் இளைஞர்கள் அங்கு முதலில் அறைக்குள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறு வரும் இளைஞர்களிடம் நகைகள் அணிந்துள்ளனரா என்பதை முதலில் நோட்டம் விடும் அந்த கும்பல் இளைஞர்கள் நகைகள் எதுவும் அணிந்து வரவில்லை என்றால் அப்படியே திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

ஆனால் நகைகள் ஏதேனும் அணிந்து வரும் பட்சத்தில் அவர்கள் அறைக்குள் அழைக்கப்பட்டு நன்கு கவனிக்கப்படுகின்றனர். பின்னர் அவர்களுக்கு குளிர்பானம் கொடுத்து குடிக்க சொல்லுகின்றனர். இப்படி கொடுக்கும் அந்த குளிர்பானத்தை குடித்ததும் இளைஞர்கள் மயங்கி விடுகின்றனர். இதையடுத்து, இளைஞர்கள் அணிந்து வந்த நகைகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் ஹோட்டலை விட்டு தப்பி சென்றுவிடுவார்களாம். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க இந்த கும்பல் வேறு வேறு ஹோட்டலில் ரூம் புக் செய்து இடத்தை மாற்றிக்கொண்டே இருந்து வந்துள்ளனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட சுமேஷிடம் இருந்து 5 பவுன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தன்பாலின சேர்க்கைக்காக சென்ற இளைஞருக்கு நேர்ந்த துயரம்; ஆப்பு வைத்த செல்போன் ஆப்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
NN

கோவையில் தன்பாலின சேர்க்கைக்காக கல்லூரி இளைஞரை அழைத்த கும்பல் அவரைத் தாக்கி செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கல்லூரி மாணவர் ஒருவர் பிரபலமான மொபைல் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில், அதில் அடையாளம் தெரியாத சில நபர்களுடன் பழகி வந்துள்ளார். அந்த மொபைல் செயலியில் இருந்து அடையாளம் தெரியாத நபர், தன் பாலின சேர்க்கைக்கு இளைஞரை அழைத்துள்ளார். இதனை நம்பி சென்ற அந்த கல்லூரி இளைஞரை தாக்கிய ஒரு கும்பல், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் 11 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கப்பட்டது. கும்பலால் தாக்கப்பட்டு பின்புற தலையில் காயமடைந்த கல்லூரி மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் செயலி மூலம் அறிமுகமாகும், முன்பின் தெரியாதவர்களை நம்பி இதுபோல் வெளியே செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Next Story

ஓரின சேர்க்கையாளர்களுக்கு குழந்தை பிறக்கும் – புதிய ஆராய்ச்சியில் நம்பிக்கை!

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
mice


ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் இணைந்து வாழ சட்டம் அனுமதி அளித்துவிட்டது. ஆனால், அவர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்தது. ஆனால், இப்போது, அவர்களுடைய தண்டுவட அணுவை வைத்து குழந்தையை குளோனிங் மூலம் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை விஞ்ஞானிகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
 

ஜப்பான் விஞ்ஞானிகள் எலிகளில் நடத்திய இந்த குளோனிங் ஆய்வு வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளனர். ஒரே பாலினத்தைச் சேர்ந்த தம்பதிகளின் தண்டுவட அணுவை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டதில் எலிக்குட்டிகள் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தனர். பெண் பாலின தம்பதியின் அணுக்கள் மூலம் உருவான குட்டிகள் ஆரோக்கியமாகவும், ஆண் பாலினத் தம்பதியின் அணுக்கள் மூலம் ஆரோக்கியம் குறைந்த குட்டிகள் உருவானதாகவும் விஞ்ஞானிகள் கூறினர்.
 

ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணுக்குள்ளும் அவர்களுடைய அப்பா மற்றும் அம்மாவின் மரபணுக்கள் இருக்கும். அவற்றை பயன்படுத்தியே இந்த குளோனிங் குட்டிகள் உருவாக்கப்பட்டன. ஒரு சில ஆண்கள் மற்றும் பெண்களிடம் தந்தை அல்லது தாயின் அணுக்கள் மட்டுமே இருக்கும் அவர்களி அணுக்களை பயன்படுத்தி குளோனிங் செய்வது இயலாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதற்கு பதிலாக கரு முட்டைகளில் உள்ள அணுக்களைப் பயன்படுத்தியோ, விந்தணுக்களை பயன்படுத்தியோ மட்டுமே குளோனிங் முறையில் உற்பத்தி செய்ய முடியும்.
 

விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு ஆண், பெண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகிறார்கள்.