Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய அச்சு இயந்திரம் - துணைவேந்தர் துவக்கி வைப்பு!

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

;'

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி இயக்ககத்தில் சுமார் 1,40,000 மாணவர்கள் பல்வேறு வகையான பாடப்பிரிவுகளில் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் விரைவாக அச்சடிக்கும் விதமாக  அண்ணாமலைப் பல்கலைக்கழக அச்சகத்தில் அதிக தொழில் நுட்பத்துடன் கூடிய  Multi FunctionalProduction அச்சு இயந்திரத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் சனிக்கிழமையன்று துவக்கிவைத்தார்.

 

பின்னர் இதுகுறித்து அவர் பேசுகையில், " இந்த புதிய அச்சு இயந்திரம் அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்தது. இதன் மூலம் பாட புத்தகங்களை விரைவாக அச்சடித்து மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்க ஏதுவாக இருக்கும்" எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் சீதாராமன், தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் சிங்காரவேல், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தினசம்பத், துணைவேந்தரின், நேர்முக செயலாளர் பாக்கியராஜ், உதவி பதிவாளர் ஸ்ரீதேவி மற்றும் துறைத் தலைவர்கள், பிரிவு தலைவர்கள், அச்சகப் பிரிவு ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.

 

சார்ந்த செய்திகள்