நீதிமன்ற விசாரணையின் போது, பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரச் சிரைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றின் விசாரணையில் நீதிபதி உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கையில், வழக்கறிஞர் ஒருவர் பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துக் கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களின் பரவின. இதை நீதிமன்ற அவமதிப்பாக கருதி தாமாக முன் வந்து விசாரித்த அமர்வு, தொடர்புடைய வழக்கறிஞருக்கு இரண்டு வாரங்கள் சாதாரண சிறைத்தண்டனையும், ரூபாய் 6,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், அந்த வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கும் பரிந்துரை செய்திருப்பதோடு, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல், தொடர்புடைய காட்சிகளை சமூக வலைத்தளங்களில் நீக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கில் உடனடியாக கைது நடவடிக்கை எடுத்த சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரையும் நீதிபதிகள் பாராட்டினர்.