சென்னை உட்பட 11 மாவட்டங்களில்2 மணி நேரத்திற்குமழைப் பொழிவு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தர்மபுரி, அரூர்,பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.அதேபோல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்,விக்கிரவாண்டி,செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்துவருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம்,தியாகதுருகம்,கச்சராபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துவருகிறது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, புளியம்பட்டி,பாளையம்பட்டி,ராமசாமிபுரம் ஆகிய பகுதிகளில் மழை பொழிந்துவருகிறது.சேலத்தின் சில பகுதிகளிலும் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்துவருகிறது.
சென்னையிலும் வில்லிவாக்கம், கோயம்பேடு, ஆழ்வார்பேட்டை, கோடம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், தி.நகர், கிண்டி, ஆவடி, பெரம்பூர், அம்பத்தூர், புழல், கே.கே.நகர், கொளத்தூர், அண்ணாநகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்துவருகிறது.
இந்நிலையில், சென்னை உட்பட 11 மாவட்டங்களில்2 மணி நேரத்திற்குமழை பொழிவு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்குமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரானடெல்லியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாகடெல்லிக்குஇந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.